- Politi CheckViral Check
- February 18, 2023
- No Comment
குர்ஆன் பின்பற்றும் முஸ்லிம் ஒருவர் சல்மான் ருஷ்டியை தாக்கினாரா?
குர்ஆன் பின்பற்றும் முஸ்லிம் ஒருவர் சல்மான் ருஷ்டியை தாக்கினாரா?
’பெரும்பான்மையாக இருக்கும் அமைதியான முஸ்லிம்கள் ஒரு பொருட்டல்ல, ஏனென்றால் குர்ஆன் படிக்கும் முஸ்லீம் ஒருவர் என்னைத் தாக்கியுள்ளார். எல்லா மதங்களும் ஒரே மாதிரி அல்ல, ஏனென்றால் அவர்கள் தங்கள் மதத்தை நம்பாதவர்களுக்கு மரணத்தை குறியிடவில்லை. ஆனால், மற்ற எல்லா சமூகம், கலாச்சாரம் மற்றும் மதம் அழிக்கப்படும் வரை அல்லது மாற்றப்படும் வரை இஸ்லாம் ஓயாது என்பதை நான் உலகுக்கு எச்சரிக்கையாக விடுக்க விரும்புகிறேன்” என்று பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கூறியதாக அவர் புகைப்படத்துடன் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.
அவர் அந்த பதிவை மறுபதிவு செய்து, ‘வெறுப்பை பரப்பும் இந்த செய்தி போலியான செய்தி என்றும், அதை தான் வெளியிடவில்லை,” என்று Salman Rushdie தனது twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
எனவே, சல்மான் ருஷ்டி புகைப்படத்துடன் ஒரு மதத்தின் மீது வெறுப்பை பரப்பும் செய்தியை உண்மை என்று நம்ப வேண்டாம், ஷேர் செய்யவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
courtesy: Salman Rushdie twitter account