- Health CheckViral Check
- May 10, 2023
- No Comment
சோமாலியாவில் இருந்து இந்தியா வந்த 500 டன் வாழைப்பழங்களில் உயிரைக்கொல்லும் பாக்டீரியா புழுக்கள் இருந்தது உண்மையா?
சில நாட்களாக பரவிவரும் ஒரு வீடியோவில், ஒருவர் தன்னிடம் உள்ள வாழைப்பழத்தை நசுக்கிப்பார்த்ததில் அதில் ‘Helicobacter’ எனும் புழு இருப்பதாகவும், அதனுடன் உள்ள வாழைப்பபழத்தை உண்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு, 12 மணி நேரத்தில் அந்த பழத்தை உண்டவர் மூளைச்சாவு ஏற்பட்டு இறந்துவிடுவார் என ஒருவர் இந்திய மொழில் அல்லாத ஏதோ மொழியில் பேசுவது இடம்பெற்றிருக்கிறது.
அதோடு, இதே போன்ற புழுக்களுடன் கூடிய வாழைப்பழங்கள், சோமாலியா நாட்டில் இருந்து 500 டன் அளவில் இந்தியா வந்திருப்பதாகவும், அதை உண்பவர்களுக்கு அபாயம் என்று எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் உள்ள உண்மைத்தன்மையை பலதரப்பில் விசாரித்தத்தில், அண்மையில் சோமாலியா நாட்டில் இருந்து 500 டன் அளவிற்கு வாழைப்பழங்கள் எதுவும் இந்தியாவிற்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.
அடுத்து, ’Helicobacter’ எனும் புழு நச்சுத்தன்மை கொண்டதா? என மருத்துவர்கள் பகிர்கையில், ஹெலிகொபாக்டர் எனும் பாக்டீரியா வயிற்றில் சென்றால், புண் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்றாலும், இந்தவித பாக்டீர்யா நேரடி கண்களால் பார்க்கமுடியாது என்றும், இந்த வாழைப்பழங்களில் உள்ள புழுக்கல் ’Helicobacter’ பாக்டீரியாவா என்பதை ஆராய்ந்து பார்த்த பின்னரே சொல்லமுடியும் என்று மருத்துவ வல்லுனர்களும், தமிழ்நாட்டில் உள்ள National Research Centre for Banana, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு கெட்டியான வாழைப்பழத்தில் இந்தவித பாக்டீரியா புழுக்கள் ஏற்படாது என்றும் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, அபுதாபி நாட்டின் விவசாயத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது பொய் என வெளியிட்டுள்ளது. எனவே, பதட்டத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற நம்பகத்தன்மை இல்லாத வீடியோக்களை பகிரவேண்டாம் மக்களே!
தகவல் உதவி: Alt News