பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வந்தனர்.
“இந்தப் புகைப்படம் சுவிட்சர்லாந்திலிருந்து எடுக்கப்பட்டது அல்ல. இது நமது அழகிய இந்தியாவில் எடுக்கப்பட்டது. காஷ்மீரின் பனி மூடிய பள்ளத்தாக்குகள் வழியாக பயணிக்கும் வந்தே பாரத் ரயிலின் காட்சி உண்மையிலேயே மூச்சடைக்க வைக்கிறது,” என்று சிலர் குறிப்பிட்டிதிருந்தனர்.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த வைரல் புகைப்படம் உண்மையா என்று இணையதளங்களில் தேடிய போது வைரல் படத்தின் கீழ்-வலது மூலையில் “GROK” என்ற வார்த்தை எழுதப்பட்டிருப்பதை காண முடிந்தது. ‘Grok’ என்பது எலோன் மஸ்க் நிறுவிய x தளத்தின் AI சார்ந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் ஆகும். இந்த சாட்பாட் X பயனர்களால் தங்களுக்கு தேவையான புகைப்படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு உருவாக்கப்படும் புகைப்படங்களில் அதன் வாட்டர்மார்க் இருக்கும், எனவே இந்த புகைப்படம் Grok AI-ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், இந்த வைரல் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியபோது, டிசம்பர் 28, 2024 தேதியிட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவில் இதே புகைப்படம் மற்றும் பனிமூட்டமான நிலப்பரப்பில் ஓடும் ரயில்களின் இதே போன்ற பிற புகைப்படங்கள் இருந்தன. இந்த புகைப்படங்கள் AI-யால் உருவாக்கப்பட்டவை என்று தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே, காத்ரா மற்றும் ஸ்ரீநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயங்கும் முதல் அதிவேக ரயிலாக இருக்கும். தற்போது சோதனை ஓட்டங்களில் உள்ள இந்த ரயில் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீவிர வானிலை நிலைகளிலும் சீராக இயங்கக்கூடிய வகையில் மேம்பட்ட கூடுதல் அம்சங்கள் இதில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த புகைப்படம் AI-யால் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதியானது. உலகின் மிக உயரமான காஷ்மீரின் செனாப் ரயில்வே பாலத்தில் அண்மையில் விடப்பட்ட வந்தே பாரத் ரயிலின் உண்மையான புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு:
பனி மலைகளுக்கு நடுவில் வந்தே பாரத் ரயில் என்று சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் உண்மையில் AI தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கபட்டது. புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை, இந்திய ரயில்வே காஷ்மீரில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வைரல் புகைப்படம் காஷ்மீரில் இயக்கப்படும் வந்தே பாரத் இரயில் சேவை அல்ல. எனவே, இதை உண்மை என்று நம்ப வேண்டாம் என்று கேட்டுகொள்கிறோம்.
Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…
Claim: புடவை அணிந்த பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம்…
Claim: தீபாவளி பாண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அதில், குறிப்பாக x தளத்தில் ஒரு வீடியோ சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம்…