- FeaturedGeneralViral Check
- February 18, 2023
- No Comment
துருக்கி நிலநிடுக்கத்தை கணித்து அங்குள்ள பூனைகள் பீதி அடைந்து ஓடியது உண்மையா?
துருக்கி நிலநிடுக்கத்தை கணித்து அங்குள்ள பூனைகள் பீதி அடைந்து ஓடியது உண்மையா?
துருக்கியில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இந்த நிலநடுக்கம் தொடங்கும் முன், ஒரு செல்லப் பிராணிக் கடையில் பூனைகள் பீதியடைந்து பதுங்க இடம் தேடி ஓடும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
பூனைகளால் நிலநடுக்கத்தை உணர முடியுமா? இது உண்மையா?
இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவதற்கு முன்பே விலங்குகளால் அவற்றைக் கண்டறிய முடியும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகு புயல்கள் மற்றும் பூகம்பங்களை விலங்குகள் மற்றும் பறவைகள் உணரும் கதைகள் ஏராளமாக நாம் கேள்விபட்டுள்ளோம்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்த நிகழ்வை சித்தரிக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அதில் ஒன்று தான் இந்த பூனைகள் நிலநடுக்கத்திற்கு முன்பு பீதியடைந்து பதுங்க இடம் தேடும் வீடியோ.
இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது, இந்த வீடியோ ஜூன் மாதம் 2018 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் cctv-இல் பதிவான வீடியோ என்பது தெரியவந்தது. இந்த வீடியோ ’ஜப்பானிய ஓட்டலில் உள்ள பூனைகள் வரவிருக்கும் பூகம்பத்தை முன்னறிவிக்கிறது’ என்ற தலைப்புடன் ஸ்புட்னிக் இணையதளம் மற்றும் சில youtube சேனல்களில் வெளியிடப்பட்டது.
அதனால், இந்த பூனை வீடியோ துருக்கியில் நடைப்பெற்றதல்ல என்றும், சமீபத்திய நிலநடுக்கத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது.
எனவே, இந்த வீடியோவில் உள்ள நிகழ்வுகள் சரி ஆனால், அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் தவறானது. இதையே நாம் Mis-information என்று சொல்கிறோம். இதை யாரும் உண்மை என்று நம்பி பகிர வேண்டாம்.
Image courtesy: Msn.com