பாகிஸ்தானில் இறந்த பெண்களின் கல்லறைகள் கிரில் போட்டு பூட்டப்படுவதாக பரவும் செய்தி உண்மையா?

பாகிஸ்தானில் இறந்த பெண்களின் கல்லறைகள் கிரில் போட்டு பூட்டப்படுவதாக பரவும் செய்தி உண்மையா?

சமீபத்தில், “பாகிஸ்தான் பெற்றோர்கள், தங்கள் இறந்த மகள்களின் பாலியல் வன்கொடுமையை தடுக்க கல்லறைகளைப் பூட்டுகிறார்கள் என்ற கூற்றுடன்” கிரில் பூட்டு போட்ட கல்லறைகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த செய்தியை, ANI Digital , DNA , Times of India உள்ளிட்ட பல ஊடகங்களும் தங்கள் வலைத்தளங்களில் செய்தியாக வெளியிட்டுள்ளனர். ஆனால் இது தவறான செய்தி என்று factcheck கண்டறிந்துள்ளது. கல்லறைகளில் கிரில் பூட்டுகளின் முதன்மை நோக்கம் அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுப்பதும், திருட்டு, அல்லது விலங்குகளின் ஊடுருவலில் இருந்து எச்சங்களைப் பாதுகாப்பதும் ஆகும். மேலும் அதே கல்லறையை மீண்டும் பயன்படுத்துவதை தடுப்பதற்காகவும் கிரில் பூட்டு போடப்படுகிறது. வைரலான படம் பாகிஸ்தானில் இருந்து வந்தது என்ற தவறான கூற்றையும் factcheck குழுவினர் மறுத்துள்ளனர். மேலும் viral ஆன படம் பாக்கிஸ்தானைச் சேர்ந்தது அல்ல என்றும் அங்குள்ள கல்லறைகளில் கிரில் பூட்டுகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அந்த குழு உறுதிசெய்துள்ளது. உண்மையில், இந்த படம் ஹைதராபாத்தில் உள்ள மதன்னாபேட் ஈடாக் அருகே அமைந்துள்ள ஒரு கல்லறையில் இருந்து உருவானது. கிரில்லை சரிசெய்து பூட்டுவதற்கான காரணம், கல்லறையை மீண்டும் பயன்படுத்துவதை தடுப்பதே என்று கல்லறையின் பராமரிப்பாளர் கூறியுள்ளார். ANI டிஜிட்டல், “பாலியல் வன்புணர்வை தவிர்க்க மகள்களின் கல்லறைகளைப் பூட்டுகிறார்கள்” என்ற கூற்றுடன், இந்த படத்தைப் பகிர்ந்துள்ளது. பல முக்கிய செய்தி ஊடகங்கள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாகக் கூறி இதை வெளியிட்டது தவறானது. தவறான கலாச்சார நடைமுறைகள் பற்றிய தவறான தகவலை பரப்பும் இந்த செய்தி மக்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மக்களை பற்றியும், நாட்டை பற்றியும் தவறாக நினைக்க வைக்கும் அபாயம் உள்ளது. சமூக ஊடக தளங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன் அதைச் சரிபார்ப்பது அவசியம். தவறான கூற்றுக்கள் எளிதில் வைரலாகும், மேலும் அவை தீங்கு மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே மக்கள் இந்த செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இது போன்ற செய்திகளை பார்த்தவுடன் நம்பாமல் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்துபார்த்தல் குழப்பங்களைத் தவிர்க்கலாம்.         

Related post

Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி நிமிட புகைபடங்கள் என்று பரவும் செய்தி உண்மையா?

Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி…

பரவிய செய்தி: உலகையே அதிர்ச்சிக்குள்ளக்கிய அகமதாபாத் விமான விபத்தின் சில நொடிகளிக்கு முன்பு விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஜூன்…
Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிக்கும் புகைப்படம் உண்மையா?

Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே…

பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே இருவரையும் இணைத்து பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே…

Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…