- Viral Check
- May 11, 2023
- No Comment
லின்க் கிளிக் செய்தால் இளைஞர்களுக்கு இலவச லேப்டாப் என வரும் மெசேஜ் உண்மையா?

இளைஞர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்குவதாகவும், அதை முன்பதிவு செய்ய ஒரு இணையதள இணைப்பைக் கிளிக் செய்து தனிப்பட்ட விவரங்களைக் தரும்படியும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஆனால், இந்த செய்தி போலியானது என்று #PIBFactCheck கண்டறிந்துள்ளது. எனவே, சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த செய்தியை உண்மை என்று நம்பி யாரும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இது போன்று தனிப்பட்ட தகவல்களைப் கேட்கும் இணையதளங்களில் தகவல்களை பகிரும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மேலும், அவை உங்கள் போனில் உள்ள டேட்டாவை திருடும் அபாயம் உள்ளதால், தெரியாத லின்க் கிளிக் செய்து உங்கள் தனிப்பட்ட தகவல்களை தரவேண்டாம்.
தகவல் உதவி: PIB