இந்தியா டுடே இப்படத்தை முதலில் பகிர்ந்த கிரிஷன்ஷு கர்க்கை தொடர்புகொண்டு கேட்டபோது, லக்னோவைச் சேர்ந்த அவர், இஸ்ரோவின் வீடியோவால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தை உருவாக்கியதாகக் கூறினார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸிலும் படத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போது வைரலாகும் படத்தை உருவாக்க அடோப் போட்டோஷாப் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.
ஆனால் இதைப்பற்றி பொய்யான செய்தி பரவுவதை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவிட்டுள்ளார்.
“எனது கலைப்படைப்புக்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும், அதை வைரலாக்கியதற்கு நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறேன்! இருப்பினும், இப்படத்தை இஸ்ரோவால் பகிரப்பட்ட “உண்மையான இம்ப்ரிண்ட்ஸ்” என்று பலர் கூறுவதை நான் பார்த்திருக்கிறேன். சந்திரயான்-3 தரையிறக்கத்திற்கான கவுண்ட்டவுனாக சந்திரன் அச்சுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், நான் இதை பல்வேறு ஊடக சேனல்களுடன் பகிர்ந்துள்ளேன். இது தொடர்பான பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள். உங்கள் உற்சாகம் ஊக்கமளிக்கிறது, மேலும் ஒவ்வொரு விருப்பத்திற்கும் பகிர்வுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உற்சாகத்தை உயிர்ப்புடன் வைத்திருப்போம், வரவிருக்கும் இஸ்ரோ சாதனைகளை தொடர்ந்து எதிர்நோக்குவோம்!” என்று அவர் பதிவிட்டுள்ளார்.