Fact Check: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசம் தனது சகோதரியை திருமணம் செய்தார் என்று பரவும் செய்தி உண்மையா ?

Fact Check: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசம் தனது சகோதரியை திருமணம் செய்தார் என்று பரவும் செய்தி உண்மையா ?

Claim:  பாகிஸ்தான் கிரிக்கட் வீரரான பாபர் அஸாம் தனது சகோதரியை மணந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் செய்தி ஒன்று பரவி வருகிறது.

அதில், “நான் செய்வதை உங்களால் செய்ய முடியுமா..? என்று இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் பேட்ஸ்மேன் #BabarAsam பின்னர் தன் சகோதரியை திருமணம் செய்து கொண்டார்…” என்று குறிபிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்ட் பலரால் பகிறப்பட்டு பரிகாசம் செய்யபட்டு வருகிறது. எனவே, இதன் உண்மைதன்மையை ஆராய முடிவு செய்தோம்.

 

https://www.facebook.com/hashtag/babar_azam_marriage_rumors

உண்மை என்ன:

இந்த செய்தியின் உண்மைதன்மையை அறிய இணையதளதில் தேடிய போது இது ஒரு போலியான செய்தி  என்பது தெரியவந்தது. கூகிள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் வைரல் ஆன புகைப்படத்தை தேடியபோது அந்த புகைப்படம் அலீம் தாரின் மகன் வலீமாவில் அலீம் தாரின் மருமகள் ஜரா நயீம் தாருடன் பாபர் அசம் எடுத்த புகைப்படம் என்பது தெரியவந்தது.

இந்த புகைப்படத்தை ஜரா நயீம் டார் தனது instagram பக்கதில் பகிர்ந்துள்ளார். ஆனால், இவர்கள் திருமணம் செய்துகொண்டது போல சமூக வலைதளங்களில் போலியான செய்தி பரவி வருகிறது. 

 

மேலும் பாபர் அசாமின் அதிகாரப்பூர்வ மக்கள் தொடர்பு நிறுவனமான saya corporation இந்த செய்தி போலியானது என்று தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கதில் பகிர்ந்துள்ளது.

மதிப்பீடு : சமூக வலைதளங்களில் பரவும் செய்தியில் இருப்பது போல் பாபர் அஸாம் அவர் தங்கையை திருமணம் செய்துகொள்ளவில்லை. அந்த புகைபடம் ஒரு திருமண வரவேற்ப்பு நிகழச்சியில் எடுக்கப்பட்டது.  அந்த படத்தில் இருப்பவர் பாபர் அஸாமின சகோதரி இல்லை. இந்த செய்தி வதந்தி என்று பல செய்தி வலைதளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. எனவே, இது உண்மையான செய்தி என்று நம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

Related post

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே இருவரையும் இணைத்து பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே…

Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…
இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம் மோகம் கொள்கிறார்கள் என்ற தலைப்புடன் ABP News செய்தி வெளியிட்டதா?

இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம் மோகம்…

Claim: புடவை அணிந்த  பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம்…
Fact Check: சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம் என சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ உண்மையா?

Fact Check: சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம்…

Claim: தீபாவளி பாண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அதில், குறிப்பாக x தளத்தில் ஒரு வீடியோ சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *