- GeneralViral Check
- February 18, 2023
- No Comment
Fact Check: மின் கட்டணம் கட்டாததால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என பரவும் தகவல் உண்மையா?

மின் கட்டணம் கட்டாததால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என பரவும் தகவல் உண்மையா?
“அன்புள்ள நுகர்வோர் உங்கள் முந்தைய மாத பில் புதுப்பிக்கப்படாததால், உங்கள் மின்சார இணைப்பு இன்றிரவு 09:30 மணிக்கு துண்டிக்கப்படும். மின்சாரம் துண்டிக்கப்படுவதை தவிர்க்க உடனடியாக எங்கள் மின்சார அதிகாரியைத் தொடர்புகொள்ளவும் அல்லது WhatsApp மின் கட்டண ரசீதை ஸ்கிரீன்ஷாட் அல்லது பில் விவரங்களை அனுப்பவும். (+91XXXXXXXXXX) நன்றி,” என்ற குறுச்செய்தி வாட்ஸ்அப் மூலமாக அனைவருக்கும் பரப்பப்பட்டு வருகிறது.
மின்சார வாரியம் அனுப்பியது போல் அனுப்பப்பட்டுள்ள வாட்ஸ்அப்’பில் வேகமாக பரவி வரும் இந்த மெசெஜ் போலியானது என்றும், அதனை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
மின் வாரியத்திலிருந்து மின்கட்டண ரசீது அனுப்பக் கோரி செய்திகள் எதுவும் வெளிவரவில்லை என்றும், மின்சார வாரியத்தின் பெயரால் இது போன்ற தவறான தகவல் வந்தால் கவனத்தில் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில்,
“மின் வாரியத்திலிருந்து இதுபோன்ற செய்திகள் எதுவும் வெளிவரவில்லை என்றும், அத்தகைய செய்திகளுக்கு நுகர்வோர் பதிலளிக்கத் தேவையில்லை என்றும் இதன் மூலம் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. நுகர்வோர் பொதுவாக EB பில்களை ஆன்லைனில் அல்லது EB அலுவலக கவுன்டர்களில் சரியான நேரத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மின்சார வாரியத்தின் பெயரால் இது போன்ற பொய்யான தகவல் வந்தால் கவனத்தில் கொள்ள வேண்டாம்,” எனவும் மின்வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின் கட்டணம் கட்டாதவர்களின் வீடுகளில் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என பரவும் பொய்யான தகவலை மக்கள் நம்ப வேண்டாம், அதில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவேண்டாம்.