- FeaturedGeneralViral Check
- February 2, 2023
- No Comment
இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்குவதாக பரவும் தகவல் உண்மையா?
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தனது 65வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு 6000 ரூபாய் மதிப்புள்ள பரிசு மற்றும் இலவச எரிபொருளை வழங்குவதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகப் பரவி வருகிறது.அனால், அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என இந்தியன் ஆயில் தனது முகநூல் பக்கத்தில் கடந்த 18 ஆம் தேதி பகிர்ந்துள்ளது.”அனைத்து அதிகாரப்பூர்வ போட்டிகள்/அறிவிப்புகளும் எங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்குகளில் மட்டுமே வெளியிடப்படும். சந்தேகிக்கும்படியான வலைத்தளங்களில் தனிப்பட்ட தகவலை வழங்க வேண்டாம். விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்…” என்று இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது.மேலும், கொல்கத்தா காவல்துறை மற்றும் ரச்சகொண்டா காவல் ஆணையரகமம் தங்கள் சமூக ஊடகக் பக்கங்களில்,”இந்த செய்தி WhatsApp இல் ஜூன் 2022 முதல் பரவி வருகிறது. இதில் உள்ள லின்க் ஒரு போலி இணைப்பு என்றும் இது இப்போது மீண்டும் ஜனவரி 2023ல் தீவிரமாக பரப்பப்படுகிறது, எனவே, தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.எனவே, இந்த செய்தியை உண்மை என்று நம்பி அந்த லின்கை கிளிக் செய்யவேண்டாம் மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.