Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24 அன்று) அறிவித்திருந்தனர். அதே நாள் ஏ.ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகளில் இளம் வயதில் இருந்து எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பங்கேற்ற பேசிஸ்ட் மோகினி டே என்பவரும் தன்னுடைய கணவர் மார்க் ஹார்ட்சுச்ஐ விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து பல செய்தி ஊடகங்களிலும், பல சமூக வலைதளங்களிலும் இந்த செய்தி வைரலானது.
இந்நிலையில், மோகினி டே கிட்டார் வாசிக்கும் போது ஏ.ஆர்.ரஹ்மான் அதை புன்னகையுடன் ரசிப்பது போல வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பரவி வரும் இந்த வீடியோ உண்மையா அல்லது சிலரால் வேண்டுமென்றே பரப்பப்படும் வதந்தியா?