- General
- November 25, 2024
- No Comment
இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம் மோகம் கொள்கிறார்கள் என்ற தலைப்புடன் ABP News செய்தி வெளியிட்டதா?
Claim:
புடவை அணிந்த பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள்” என்பதை அந்த செய்தி நிறுவனம் ஆராய்வதாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
வகுப்புவாதத்தை உண்டாக்கும் இந்த செய்தியை உண்மையில் ஏபிபி நியூஸ் வெளியிட்டதா? பரவி வரும் இந்த கூற்று உண்மையா?
உண்மை என்ன?
இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம் மோகம் கொள்கிறார்கள் தெரியுமா? என்ற தலைப்புடன் ABP news ஒரு ஆய்வை மேற்கொண்டு செய்தி வெளிட்டதாகக் கூறி X தளத்தில் பயனர் ஒருவர் புடவை அணிந்த பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழ்ந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
“ஏபிபி செய்தி நிறுவனத்தை கூப்பிய கைகளுடன் கேட்டுக்கொள்கிறேன்!! இதுபோன்ற விஷயங்களை இடுகையிட வேண்டாம், இவை அனைத்தும் ரகசியமானது, தயவுசெய்து எல்லோரிடமும் சொல்ல வேண்டாம்…” என்ற கிண்டலான தலைப்புடன் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
ABP न्यूज वालों से मेरी हाथ जोड़कर विनती है !!
— 𝐀𝐋𝐈 𝐒𝐎𝐇𝐑𝐀𝐁 (ᴾᵃʳᵒᵈʸ) (@007Alisohrab_) November 13, 2024
ऐसी पोस्ट ना डाले ये सब बाते गुप्त होती है कृपया सबको ना बताए pic.twitter.com/3eFIh0sqoM
X தளத்தில் பகிரப்பட்ட இந்த செய்தி உண்மைதானா என்று ஆராய்ந்து பார்த்தபோது, ABP news இது போன்ற ஒரு செய்தியை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது x தளத்திலோ வெளியிடவில்லை என்பது உறுதியானது.
இதை பற்றி மேலும் ஆராய்ந்து பார்த்தபோது, இது போலியானது என்றும், செயற்கையாக AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்றும் உண்மை சரிபார்க்கும் செய்தி நிறுவனமான BOOM கண்டறிந்தது செய்தி வெளியிட்டுள்ளது தெரியவந்தது.
ட்ரூமீடியாவின் AI டிடெக்டர் கருவியைப் பயன்படுத்தி, பகிரப்பட்ட இந்த புகைப்படம், AI மூலம் உருவாக்கபட்டது என்பதை Boom செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தி தனது இணையதளதில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் ABP News எப்போதும் பயன்படுத்தும் எழுத்துருவுடன் பொருந்தவில்லை என்றும் போலியான அந்த கிராபிக்ஸ் படத்தை தாங்கள் வெளியிடவில்லை என்றும் ABP news சேனல் தெளிவுப்படுத்தியுள்ளது என்றும் அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மதிப்பீடு:
இந்து பெண்கள் முஸ்லிம் ஆண்களிடம் அதிக மோகம் கொள்ளவதாக ஆய்வு மேற்கொண்டு ABP நியூஸ் வெளியிட்டதாக பரவும் புகைப்படம் போலியானது, அந்தப் படம் AI தொழில்நுட்பத்தை வைத்து தயாரித்த போலியான புகைப்படமாகும். வகுப்புவாதத்தை ஏற்படுத்தும் இந்த புகைப்படமும் அது கூறும் செய்தியும் உண்மை என்று நம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.