Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி நிமிட புகைபடங்கள் என்று பரவும் செய்தி உண்மையா?

Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி நிமிட புகைபடங்கள் என்று பரவும் செய்தி உண்மையா?

பரவிய செய்தி: உலகையே அதிர்ச்சிக்குள்ளக்கிய அகமதாபாத் விமான விபத்தின் சில நொடிகளிக்கு முன்பு விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஜூன் மாதம் 12 ஆம் தேதி இந்த விமானம், புறப்பட்டு ஒரு நிமிடத்திற்குள்ளாகவே விபத்து நிகழ்ந்துவிட்டது. 

“அகமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணத்தின் படம்” என்று குறிப்பிடபட்டு ஒரு புகைப்படம் பயணிகள் அதிர்ச்சியில் அலறுவது போல சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

 

உண்மை என்ன : விமானம் புறபட்டு விபத்துக்குள்ளான நேரம் மிக குறைவு. இந்த இடைவேளையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று பரவிய வைரல் பதிவின்  உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தோம். மதியம் 1.38 மணிக்கு  புறப்பட்ட விமானம், 1.39 மணியளவில் தரையில் விழுந்து வெடித்துள்ளதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மிகக் குறைவான இந்த நேரத்தில் விமானம் டேக் ஆஃப் ஆகும்  போது அப்படி ஒரு புகைப்படத்தை எடுத்திருக்க வாய்பு இல்லை.  

எனவே, இது முற்றிலும் உண்மையாக இருக்க முடியாது என்ற சந்தேகத்தை உறுதி செய்ய, இணையதளங்களில் மேலும் ஆராய்ச்சி செய்தோம். 

 

 

பரவிய புகைபடம் உண்மையில் ஏர் இந்தியா விமானம்தானா என்பதை உறுதி செய்ய அந்த விமானம் உள்ளே எப்படி இருக்கும் என்று அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை தேடிப் பார்த்தோம். அப்போது ஏர் இந்தியா விமான இருக்கையின் நிறமும் பரவிய வைரல் வீடியோவில் இருக்கும் விமான இருகையின் நிறமும் மாறுபட்டிருப்பதை காண முடிந்தது. 

 

 

இதை தவிர, வைரல் வீடியோவில் ஒரே ஒரு இருக்கை தான் காணப்பட்டது. ஆனால், ஏர் இந்தியா விமானத்தில் அப்படி ஒரு இருக்கை இருப்பதாக தெரியவில்லை. எக்கானமி இருக்கையில் ஒரு வரிசையில் மூன்று சீட்டுகள் ஒன்றாக தான் காணப்படுகிறது. 

 

விமானம் புறப்படும்போது நாம் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும். ஆனால், விபத்து நிகழ்ந்த ஒரு நொடியில் சீட் பெல்ட் அணியாமல் இந்த வீடியோவை எடுத்து அதை சமூக வலைதளதில் பதிவிட்டிருக்க  முடியாது. மேலும், விபத்தில் உயிரிழந்த பயணிகளின் உறவினர்கள் யாரும் இப்படி ஒரு வீடியோவை செய்தி ஊடகங்களுக்கு பகிர்ந்த மாதிரி தெரியவில்லை. அதே போல், அரசு தரப்பிலும், விமான நிறுவனம் தரப்பிலும் இதை போன்று எந்த ஒரு வீடியோவோ அல்லது  புகைப்படமோ பகிரப்படவில்லை. 

 

எனவே, இந்த வீடியோ AI மூலம் செயறக்கையாக உருவாக்கப் பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை உறுதி செய்ய மேலும் ஆய்வு செய்தோம். அப்போது இந்த வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்று சில உண்மை சரி பார்க்கும் வலைதளங்கள் பதிவிட்டிருப்பத்து தெரியவந்தது. பிறகு வைரல் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் ஆராய்ந்த போது,  

 

2024 ஆம் ஆண்டு கஜகஸ்தான் நாட்டில் விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளான நிகழ்வில்விபத்து ஏற்படுவதற்கு முன்பு பயணிகள் பிரார்த்தனை செய்த காட்சி வைரலாக பகிரப்பட்டது, என்று இங்கிலாந்தின் டெய்லி மெயில் ஊடகத்தின் செய்தியை காண முடிந்தது. 

 

 

கிடைத்த தகவலை வைத்து மேலும் ஆராய்ந்த போது  கடந்த 2024 டிசம்பர் மாதம் கஜகஸ்தானில் நிகழந்த விபத்தின் வீடியோவின் ஒரு பகுதியும், அகமதாபாத் விபத்தின் முன் எடுத்த வீடியோ என்று இப்போது பரவும் வீடியோவில் இருப்பது தெரியவந்தது.  எனவே, அகமதாபாத் விபத்துக்கு முன் எடுத்த புகைப்படம் என்று பரவும் செய்தி போலியானது என்பது உறுதியாகிறது.

 

முடிவு : அகமதாபாத் விமான விபதுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ என்று பரவும் செய்து போலியானது. உண்மையில் கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்ட விபத்தைன் பழைய வீடியோவுடன் ஏஐ சேர்த்து உருவாகபட்ட வீடியோவாகும். எனவே, இதை உண்மை என்று நம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுகொள்கிறோம். 

 

Related post

Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிக்கும் புகைப்படம் உண்மையா?

Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே…

பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே இருவரையும் இணைத்து பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே…

Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…
இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம் மோகம் கொள்கிறார்கள் என்ற தலைப்புடன் ABP News செய்தி வெளியிட்டதா?

இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம் மோகம்…

Claim: புடவை அணிந்த  பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம்…

Leave a Reply