Fact Check: மணிப்பூர் பெண்ணை ராணுவத்தினர் துன்புறுத்தி தலையில் சுட்டுக்கொல்வதாக பரவும் வீடியோ உண்மையா?

Fact Check: மணிப்பூர் பெண்ணை ராணுவத்தினர் துன்புறுத்தி தலையில் சுட்டுக்கொல்வதாக பரவும் வீடியோ உண்மையா?

Claim

உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணை இராணுவப் பணியாளர்கள் துன்புறுத்தி தலையில் சுட்டுக் கொள்வதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இச்சம்பவம் மணிப்பூரின் தெருக்களில் பட்டப்பகலில் நடந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்ற அந்த பெண், குக்கிப் இனத்தைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவ பெண் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

3 நிமிட நீளமான அந்த வீடியோவில் ஆயுதம் ஏந்திய சீருடையில் இருந்த பலர் அந்தப் பெண்ணை விசாரிக்கும் போது அவரைத் தாக்கி,  கைவிலங்கிட்டு, கண்களைக் கட்டி நடுரோட்டில் மண்டியிடச் செய்து, துன்புறுத்துகின்றனர். அந்த பெண் அவர்களிடம் தன்னை கொடுமை படுத்த வேண்டாம் என்று கேட்பதும, அதை நிறுத்துமாறு கெஞ்சுவதும், மனதை கலங்கவைப்பதாக இருக்கிறது. ஆனால், அவர்கள் அந்தப் பெண்ணை தலையில் பலமுறை சுட்டுக் கொள்வது போல் அந்த வீடியோவில் உள்ளது.

 

சமூக வலை தளங்களில் இந்த வீடியோ குறித்த சர்ச்சை அதிகமாக தற்போது பரவி வருகிறது. மணிப்பூர்; மோடி & ஷாவின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. ஆயுதம் ஏந்திய வீடியோக்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. குடிமக்கள் சித்திரவதை செய்து, இறுதியில் ஒரு குக்கி கிறிஸ்தவ இளம் பெண்ணை சுட்டுக் கொன்றனர். மணிப்பூர் தீப்பிடித்து எரிகிறது, ஆனால் மோடி அமைதியாக இருக்கிறார். அந்த பெண் தலையில் இரக்கமின்றிச் சுடப்பட்ட வீடியோவின் பகுதி பகிரப்படவில்லை.” என்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் கூறப்பட்டுள்ளது

உண்மை என்ன?

கொடூரமான இந்த வீடியோ உண்மையானதா? அதில் குறிப்பிட்டுள்ளது போல் மணிப்பூரில் நடந்தததா என்று கண்டறிய இணையதளத்தில் தேடிய போது அந்த வீடியோ கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மியன்மாரில் நடந்த சம்பவம் என்று Boom fact check குழு கண்டறிந்துள்ளது தெரியவந்தது.

அந்த வீடியோ மிகவும் மோசமானதாகவும் கொடூரமாகவும் உள்ளதால் அதை இங்கே வெளியிடவில்லை. இந்த வீடியோ, 2023 மே மாதம் முதன்முதலில் மணிப்பூரில் தொடங்கிய மைடேய் மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையேயான தற்போதைய மோதல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ மியான்மரின் தாமு நகரில் ஜூன் 2022ல் நடந்த சம்பவத்தின் வீடியோ என்று BOOM மற்றும் quint ஆகிய fact check நிறுவனங்கள் கண்டறிந்துள்ளது. இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வைரலானது. 

அதனை இப்போது மணிப்பூரில் நடைபெறும் சமூக மோதல்களுடன் இணைக்கப்பட்டு பகிரப்படுகிறது. உண்மையில் இந்த சம்பவத்துக்கும், மணிப்பூரில் நடந்து வரும் மோதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

 

மேலும், மியான்மரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து டிசம்பர் 6, 2022 அன்று Myanmar Now என்ற வலைத்தளத்தில் செய்தியாக வெளியாகி உள்ளது. அதில் உள்ள வீடியோவும் இப்பொது பகிர்ப்பதும் விடியோவும் ஒன்று என்பது இந்த மூலம் கண்டறியப்பட்டது.

 

“இது மணிப்பூரில் நிகழ்ந்ததாக வீடியோ ஒன்று எனக்கு வந்தது. ஆனால், இது போலியான செய்தி. இச்சம்பவம் நடைபெற்றது மியான்மாரில். சமூக ஊடகங்களின் யுகத்தில் இதுபோன்ற கொடூரமான வீடியோக்களை பரப்புவதற்கு முன் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பல அங்கீகரிக்கப்படாத வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இப்போது சச்சரவு நிறைந்த மணிப்பூருக்கு உண்மை தான் தேவைப்படுகிறதே அன்றி, பிரச்சாரம் அல்ல…” என்று பிரபல மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் கூறியுள்ளார்”

மதிப்பீடு :
கொடூரமான முறையில் மணிப்பூரில் ஒரு பெண், சீருடை அணிந்த ராணுவத்தினரால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ, உண்மையில் மணிப்பூரில் நிகழ்ந்தது அல்ல. அந்தச் சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மியன்மாரில் நிகழ்ந்தது. இப்போது மணிப்பூரில் நடைபெறும் மோதல்களுக்கும் இந்த விடியோவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, இது ஒரு போலியான செய்தி என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதன் புழக்கத்தை நிறுத்த பங்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.


Related post

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே இருவரையும் இணைத்து பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே…

Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…
இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம் மோகம் கொள்கிறார்கள் என்ற தலைப்புடன் ABP News செய்தி வெளியிட்டதா?

இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம் மோகம்…

Claim: புடவை அணிந்த  பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம்…
Fact Check: சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம் என சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ உண்மையா?

Fact Check: சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம்…

Claim: தீபாவளி பாண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அதில், குறிப்பாக x தளத்தில் ஒரு வீடியோ சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *