புதிய கல்விக்கொள்கைக்கு அமைச்சரவை பச்சைக் கொடி காட்டியுள்ளது. அதன் அடிப்படையில், 12 ஆம் வகுப்பில் மட்டுமே பொது தேர்வு இருக்கும், எம். ஃபில்., படிப்பு இனி இல்லை.. கல்லூரி பட்டப்படிப்பு 4 ஆண்டுகள். 10-ஆம் வகுப்பு பொது தேர்வு இல்லை, என்று சமூக ஊடகங்களில் வைரலாக செய்தி பரவி வருகிறது.
மேலும், “இனி 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தாய்மொழி, உள்ளூர் மொழி மற்றும் தேசிய மொழி மட்டுமே கற்பிக்கப்படும். மீதமுள்ள பாடம், ஆங்கிலமாக இருந்தாலும், பாடமாக கற்பிக்கப்படும்,” என்றும் அந்த செய்தி கூறுகிறது.
ஆனால், இது தொடர்பாக கல்வி அமைச்சகம் எந்த உத்தரவும் அண்மையில் பிறப்பிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. இது போலியான செய்தி. இதே செய்தி கடந்த ஆண்டு பலரால் பகிரப்பட்டு, பிஐபி அப்போது அது தவறான தகவல் என அறிக்கை வெளியிட்டிருந்தது.
தற்போது மீண்டும் வைரலாக பரவும் இந்த தகவலில் உண்மையில்லை. எனவே, இதை யாரும் உண்மை என்று நம்பி பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…
Claim: புடவை அணிந்த பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம்…
Claim: தீபாவளி பாண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அதில், குறிப்பாக x தளத்தில் ஒரு வீடியோ சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம்…