Fact Check: Chandrayaan 3-இல் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் வீடியோ என்று பரவும் செய்தி உண்மையா?

Fact Check: Chandrayaan 3-இல் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் வீடியோ என்று பரவும் செய்தி உண்மையா?

Claim : ‘Chandrayaan3 மிஷன்: சந்திரனில் இருந்து பூமி எப்படி இருக்கிறது என்று பாருங்கள்’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 21 அன்று X (முன்னர் ட்விட்டர்) இல் ஒரு வீடியோ பகிரப்பட்டது. மற்றொரு X பயனரும் ஆகஸ்ட் 20 அன்று இந்தியில் ஒரு தலைப்புடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில்,

 “சந்திரனில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் அனுப்பிய அழகான படம் இதோ!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பதிவில் நிலவின் மேல் இருந்து பூமியின் காட்சியை காட்டுவது போல் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பலராலும் பகிரபட்டு வந்தது.’

 

உண்மை என்ன :

இந்த வீடியோவின் உண்மைதன்மையை ஆராய இனணயத்தில் தேடிய போது மிதிலேஷ் கேஷாரி (@mkeshari)என்ற ஒரு பயனர் இதை முன்பே பகிர்ந்துள்ளது  தெரியவந்தது.

சந்திரயான்-3 என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) சந்திரயான் 1 மற்றும் 2க்குப் பிறகு சமீபத்திய சந்திர ஆய்வுப் பணியாகும். இது ஆகஸ்ட் 14, 2023 அன்று விக்ரம் என்ற லேண்டர் மற்றும் பிரக்யான் என்ற ரோவருடன் ஏவப்பட்டது. சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 மாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ சேனல்களில் நிலவின் பல காட்சிகளை பகிர்ந்துள்ளது. 

ஆனால், X இல் பகிறபட்ட வீடியோ ai ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ. அவை சந்திரயான்-3 இல் இருந்து எடுக்கபட்ட வீடியோ அல்ல. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ X கணக்கிலோ அல்லது அதன் இணையதளத்திலோ இந்த வீடியோ வெளியிடப்படவில்லை.  

மேலும், இணையதளத்தில் இந்த வீடியோவைப் பற்றி ஆராய்ந்த போது, மிதிலேஷ் கேசரி என்பவரின்  ட்வீட்டில் பல பயனர்கள் வீடியோ திருத்தப்பட்டதாகவும், போலியாகவும் இருப்பதாகக் கருத்துத் தெரிவித்ததைக் காண முடிந்தது. அதைத் தொடர்ந்து அந்த வீடியோ AI-யால் உருவாக்கப்பட்டதாகவும் சந்திரயான்-3 ஆல் எடுக்கப்பட்டதல்ல என்றும் அவர் அதில் பதிவிட்டிருந்தார

 

அதே பதிவில், சந்திரனைப் பற்றிய வேறு நீண்ட வீடியோவிற்கான இணைப்பையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பயன்படுத்திய வீடியோ எடிட்டிங் மென்பொருளான invideo மற்றும் storyblock  வாட்டர்மார்க் தெளிவாகத் தெரிகிறது. 

 

மதிப்பீடு: 

இந்த வீடியோ AI ஆல் -உருவாக்கப்பட்ட வீடியோ என்பதும், சந்திரயான்-3 ஆல் எடுக்கப்பட்ட பூமியின் காட்சிகள் இல்லை என்பதும் ஆதாரங்களுடன் தெரியவந்ததால் இந்தக் கூற்று தவறானது என்று தெரிவிக்கிறோம். இதை உண்மை என்று நம்ப வேண்டாம். உண்மையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நீங்கள் காணலாம்.

 

Related post

Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி நிமிட புகைபடங்கள் என்று பரவும் செய்தி உண்மையா?

Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி…

பரவிய செய்தி: உலகையே அதிர்ச்சிக்குள்ளக்கிய அகமதாபாத் விமான விபத்தின் சில நொடிகளிக்கு முன்பு விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஜூன்…
Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிக்கும் புகைப்படம் உண்மையா?

Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே…

பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே இருவரையும் இணைத்து பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே…

Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…