மக்களை Whatsapp மூலம் கண்காணித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மோடி அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளதாக பரவும் செய்தி உண்மையா?
Claim : மக்களின் வாட்ஸ்அப் செய்திகளை இந்திய அரசு கண்காணிக்கும் என்று சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அதில், வாட்ஸ்அப் மூலம் பரிமாறப்படும் செய்திகளை கண்காணித்து மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மோடி அரசாங்கம் புதிய வாட்ஸ்அப் வழிகாட்டுதல்களை வெளியிட்டதாக வைரல் செய்தி கூறுகிறது.
ஒருவர் அனுப்பும் வாட்ஸ்அப் செய்தியில் இரண்டு நீல நிற டிக்குகள் மற்றும் ஒரு சிவப்பு நிற டிக் இருந்தால் அவருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், ஒரு நீல டிக் மற்றும் இரண்டு சிவப்பு டிக் இருந்தால் அரசாங்கம் வாட்ஸ்அப் செய்தி அனுப்பியவரின் dataவை சோதித்து பார்க்கிறது என்றும், அதே நேரத்தில் மூன்று சிவப்பு டிக்குகள் காணப்பட்டால் அரசாங்கம் செய்தி அனுப்பியவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என்றும் சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது.
உண்மை என்ன :
வைரல் ஆகும் இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்த போது இந்த செய்தி கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்ததில் இருந்து வலைதளங்களில் பரவி வரும் போலியான செய்தி என்பது தெரியவந்தது.
அப்போதே PIB, Business டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பல ஊடகங்கள் இது போலியான செய்தி என்று கண்டறிந்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றன. இருப்பினும் இந்த செய்தி இப்போதும் தொடர்ந்து உண்மை என்று நம்பி பலரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அரசாங்கம் மக்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் செய்தியை கண்காணித்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க போவதாக பரவும் செய்தி போலியானது. இது கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் மீண்டும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் போலியான செய்தி. வாட்ஸ்அப்இல் அனுப்பப்படும் செய்தி அரசாங்கத்தால் கண்காணிக்கப்படவில்லை. பல வருடங்களாக பகிறப்பட்டு வரும் இந்த போலியான செய்தியை உண்மை என்று நம்பி பகிறவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பரவிய செய்தி: உலகையே அதிர்ச்சிக்குள்ளக்கிய அகமதாபாத் விமான விபத்தின் சில நொடிகளிக்கு முன்பு விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஜூன்…
பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…