லிப்ட் ஒன்றில் நடிகை ரஷ்மிகா மந்தனா உள்ளே செல்வது போன்று ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. பலரும் இதனை உண்மை என்று நம்பி பகிர்ந்து வந்தனர். கருப்பு உடை அணிந்து லிப்டின் உள்ளே நுழையும் ரஷ்மிகாவின் வைரல் வீடியோ தான் இன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட வீடியோவாக உள்ளது.
உண்மை என்ன ?
பலராலும் பகிரப்பட்ட இந்த வைரல் வீடியோ உண்மையில் Ai அதாவது, செயற்கை நுண்ணறிவு மூலம் ‘Deep Fake’ என்று அழைக்கப்படும் யுக்தி பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்டதாகும். வேறு ஒரு பெண்ணின் உடலில் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் தலையை பொருத்தி இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
வேகமாக பரவி வைரலான இந்த வீடியோ தற்போது தனிப்பட்ட நபர்களின் பாதுகாப்பு குறித்து பல முக்கியக் கேள்விகளை எழுப்புகிறது.
🚨 There is an urgent need for a legal and regulatory framework to deal with deepfake in India.
You might have seen this viral video of actress Rashmika Mandanna on Instagram. But wait, this is a deepfake video of Zara Patel.
உண்மையான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஒரிஜினல் வீடியோவில் உள்ளவர் பிரிட்டிஷ்-இந்திய பெண் ஜாரா படேல் ஆவார். இந்தியாவில் பலர் அவருடைய சமூக வலைதளங்களைப் பின் தொடர்கின்றனர்.
The original video is of Zara Patel, a British-Indian girl with 415K followers on Instagram. She uploaded this video on Instagram on 9 October. (2/3) pic.twitter.com/MJwx8OldJU
இந்த வீடியோவை அக்டோபர் 9 ஆம் தேதி ஜாரா வெளியிட்டார். இந்த வீடியோ ‘போலி’ என்று கண்டுபிடிக்க கடினமாக இருக்கும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மூத்த நடிகரான அமிதாப் பச்சன் இதற்கு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ், எந்தவொரு தவறான தகவலையும் புகாரளித்த 36 மணி நேரத்திற்குள் நீக்குவதற்கு தளங்கள் சட்டப்பூர்வமாக கடமைப்பட்டிருப்பதாகப் பகிர்ந்துள்ளார்.
PM @narendramodi ji's Govt is committed to ensuring Safety and Trust of all DigitalNagriks using Internet
Under the IT rules notified in April, 2023 - it is a legal obligation for platforms to
➡️ensure no misinformation is posted by any user AND
”இது குறித்து தான் மிகுந்த மன வேதனையில் இருப்பதாகவும், இந்த நேரத்தில் தனக்கு ஆதரவாக நின்ற தனது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுருக்கிறார் நடிகை ரஷ்மிகா.”
I feel really hurt to share this and have to talk about the deepfake video of me being spread online.
Something like this is honestly, extremely scary not only for me, but also for each one of us who today is vulnerable to so much harm because of how technology is being misused.…
மதிப்பீடு: சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் வீடியோ உண்மையான வீடியோ அல்ல. அது டீப் ஃபேக் தொழில் நுட்பத்தைக்கொண்டு உருவாக்கப்பட்ட போலியான வீடியோ. எனவே, இதை யாரும் உண்மை என்று நம்பி பகிர வேண்டாம்.
பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…
Claim: புடவை அணிந்த பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம்…