Fact Check: தொழிலதிபர் ரத்தன் டாடா கிரிக்கெட் வீரர் ரஷித் கானுக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்தாரா?

Fact Check: தொழிலதிபர் ரத்தன் டாடா கிரிக்கெட் வீரர் ரஷித் கானுக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்தாரா?
Claim:
அக்டோபர் 23 அன்று, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியதை அடுத்து இந்தியக் கொடியை ஏந்தியதற்காக ஐசிசியால் ரூ.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ரஷித் கானுக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ரூ.10 கோடி பரிசுத் தொகை வழங்கியதாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வந்தது. 

 

ரத்தன் டாடா மீண்டும் தனது மகத்துவத்தைக் காட்டியுள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், பாக் அணியை வீழ்த்தி, இந்தியக் கொடியை எடுத்துக்கொண்டு, வெற்றியில் மைதானத்தை சுற்றி ஓடி, ’பாரத் மாதா கி ஜெய்’ என்று கூச்சலிட்டார். அவரது நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் அணி ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது. ஐசிசி மற்றும் மற்ற அனைத்து உலக விளையாட்டு அமைப்புகளும், எப்போதும் போல், எந்தவொரு ‘பாரதிய’ புகழ்ச்சியையும் கடுமையான எதிர்ப்பைக் காட்டுகின்றன. ரஷித் கானுக்கு ஐசிசி 55 லட்சம் அபராதம் விதித்தது. ரத்தன் டாடா, நமது தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தியவரைப் பாராட்ட வேண்டும். அபராதத் தொகையான ரூ.55 லட்சத்தை மட்டும் செலுத்தாமல், ரஷித் கானுக்கு ரூ.10 கோடியை வெகுமதியாக வழங்குவதாக டாடா அறிவித்தார்,” என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. 

பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் இந்த செய்தியை  பகிர்ந்து வந்தனர். சில x பயனர்களும் இந்த செய்தியை தங்கள் பக்கதில் பகிர்ந்துள்ளனர்.

 

உண்மை என்ன?

இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய, ரத்தன் டாடா அவர்களின் அதிகாரபூர்வ X தளதில் தேடினோம். அப்போது ரத்தன் டாடா அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் தான் வெளியிடவில்லை என்று, 30 அக்டோபர் 2023 அன்று அதில் வெளியிட்டிருந்தார். 

 

எந்தவொரு கிரிக்கெட் உறுப்பினருக்கும் அபராதம் அல்லது சன்மானம் தொடர்பாக நான் ஐ.சி.சி அல்லது எந்த கிரிக்கெட் சார்ந்த துறைக்கும் எந்த பரிந்துரையும் செய்யவில்லை. எனக்கு கிரிக்கெட்டுடன் எந்த தொடர்பும் இல்லை. வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் மற்றும் இதுபோன்ற வீடியோக்கள் எனது அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து வரும் வரை நம்ப வேண்டாம், என்று அதில் பதிவிட்டிருந்தார்.

இதே போல் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தியதாகப் பரவிய செய்தியும் அதறக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் உண்மை தானா என்று இணையதளதில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் செய்தி ஊடகங்களில் வெளிவரவில்லை என்பது தெரியவந்தது.

 

மதிப்பீடு :

பாகிஸ்தானுடனான போட்டிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் இந்தியக் கொடியைக் காட்டவில்லை என்பதும் அதற்காக அவருக்கு ஐசிசி அபராதம் விதிக்கவில்லை என்பதும் இந்த செய்தியின் உண்மையை கண்டறியும்போது தெரியவந்தது. அதோடு, கிரிக்கெட் வீரருக்கு ரத்தன் டாடா ரூ.10 கோடி சன்மானம் அறிவித்ததாக கூறப்படுவதும் போலியான செய்தி. எனவே, இதை உண்மை என்று நம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.


Related post

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே இருவரையும் இணைத்து பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே…

Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…
இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம் மோகம் கொள்கிறார்கள் என்ற தலைப்புடன் ABP News செய்தி வெளியிட்டதா?

இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம் மோகம்…

Claim: புடவை அணிந்த  பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம்…
Fact Check: சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம் என சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ உண்மையா?

Fact Check: சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம்…

Claim: தீபாவளி பாண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அதில், குறிப்பாக x தளத்தில் ஒரு வீடியோ சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *