உண்மை என்ன ?
பலராலும் பகிரப்பட்ட இந்த வைரல் வீடியோ உண்மையில் Ai அதாவது, செயற்கை நுண்ணறிவு மூலம் ‘Deep Fake’ என்று அழைக்கப்படும் யுக்தி பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்டதாகும். வேறு ஒரு பெண்ணின் உடலில் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் தலையை பொருத்தி இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
வேகமாக பரவி வைரலான இந்த வீடியோ தற்போது தனிப்பட்ட நபர்களின் பாதுகாப்பு குறித்து பல முக்கியக் கேள்விகளை எழுப்புகிறது.