- Viral Check
- November 5, 2024
- No Comment
Fact Check: சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம் என சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ உண்மையா?
Claim:
தீபாவளி பாண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அதில், குறிப்பாக x தளத்தில் ஒரு வீடியோ சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம் என்றும் பெரிய கட்டிடங்களுக்கு மத்தியில் வானவேடிக்கை நடப்பதை அங்குள்ள மக்கள் கண்டு மகிழ்வது போலவும் பகிரபட்டது.
பரவிவரும் இந்த வைரல் வீடியோ உண்மையா? சவுதி அரேபியாவில் அந்த வீடியோவில் இருப்பது போல தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றதா?
உண்மை என்ன:
பரவி வரும் இந்த வீடியோவின் உண்மைதன்மையை அறிய, கூகிள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் ஆராய்ந்த போது, இந்த வீடியோ தீபாவளி கொண்டாட்ட வீடியோ இல்லை என்றும், கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் தேதி, சவுதி அரேபியாவில் நடைபெற்ற 94வது தேசிய தினக் கொண்டாட்டம் என்று மக்கள் பலரும் தங்கள் instagram மற்றும் youtube சேனல்களில் பகிர்ந்துள்ளனர் என்பது தெரியவந்தது.
Youtube லிங்க் ஆதாரம்: https://youtu.be/_JjeK2kuQVE?si=0eeKvJrru4QXPdEI
இதைப் பற்றி மேலும் ஆராய்ந்த போது, பரவி வரும் இந்த வைரல் வீடியோ, 29 ஆம் தேதி நவம்பர் 2023ல் எக்ஸ்போ 2030-ஐ நடத்தும் உரிமையை சவுதி அரேபியா நாடு வென்ற பிறகு நடந்த கொண்டாட்டம் இது என்று பல உண்மை சரிபார்க்கும் இணையதளங்கள் வெளியிட்டிருந்தன.
youtube லிங்க்: https://www.youtube.com/watch?v=SJcHy3E8WuI
எனவே, இது சென்ற செப்டெம்பர் மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற்ற தேசிய நாள் கொண்டாட்ட விழாவும் இல்லை, அக்டோபர் மாதம் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டமும் இல்லை என்றும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எக்ஸ்போ நடத்த உரிமை பெற்ற மகிழச்சியை கொண்டாடும் வீடியோ என்பது உறுதியானது.
மதிப்பீடு:
சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம் என்று பரவி வரும் இந்த வீடியோ, போலியான தகவலுடன் பகிரபட்டு வருகிறது. உண்மையில் எக்ஸ்போ 2030-ஐ நடத்தும் உரிமையை சவுதி அரேபியா நாடு வென்ற மகிழச்சியை வெளிபடுத்தும் விதமாக நடைபெற்ற கொண்டாட்டம் தான் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இதற்கும் இப்போது நடைபெற்ற தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுசென்ற வருடம் நடந்த நிகழ்வாகும். அதனால் இதை உண்மை என்று நம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.