மேலும், சென்ற ஆண்டும் இதே போல் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவியதும், அதுவும் போலி என்று பல உண்மை சரி பார்க்கும் இணைதளங்கள் கண்டறிந்துள்ளதும் தெரியவந்தது.
லிங்க் ஆதாரம்: https://tinyurl.com/4jsfrd4z
சென்ற வருடம் வைரல் ஆன அந்த இணையதள பதிவில், அரசின் இந்த இலவச சலுகையைப் பெற, மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறும், அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது போல் அதில் வழங்கப்பட்டுள்ள அரசின்அதிகாரப்பூர்வ வலைதளத்தை தவறாமல் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், அந்த பதிவில் தவறான வாக்கிய அமைப்புகளும் மற்றும் இலக்கணப் பிழைகளும் காணப்பட்டன. PIB factcheck இது போலியான தகவல் என்று தனது டிவிட்டர் (இப்போது x) பக்கதில் அறிவித்திருந்தது.