- GeneralViral Check
- June 16, 2023
- No Comment
Fact Check: டாடா மோட்டார்ஸ் 15வது ஆண்டு விழா இலவசப் பரிசு என்று பரவும் லிங்க் உண்மையா?
Claim: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 15வது ஆண்டு விழாவிற்காக டாடா பஞ்ச் காரை இலவசமாக வழங்கவுள்ளதாக போலியான லிங்க் ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
அந்த மெசேஜில் உள்ள அந்த லிங்கை கிளிக் செய்தால் சில கேள்விகள் கேட்கப்படுகிறது. அந்த கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் பரிசு பெட்டிகள் வருகிறது. அதில் முதல் பரிசுப் பெட்டியில் எதுவும் இல்லை. இரண்டாவதாக கிளிக் செய்யப்படும் பரிசுப் பெட்டியில் டாடா பஞ்ச் கார் பரிசாக விழுந்ததாக அறிவிக்கப்படுகிறது. அதை பெறுவதற்கு இந்த லிங்கை 5 வாட்ஸ் அப் குழுக்கள் அல்லது 20 தனி நபர்களுக்கு பகிர வேண்டும் என்று வருகிறது.
இந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் டாடா பஞ்ச் கார் பரிசாக கிடைக்குமென்று பலர் இதை வாட்ஸ் அப்பில் சமீபத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை என்ன? டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1945ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது கிட்டத்தட்ட 80 ஆண்டுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்படியான விஷயங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்தால் அது குறித்து டாடா மோட்டார்ஸ் இணையதளத்திலேயே பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், இப்படியாக எந்த பதிவுகளும் டாடா மோட்டார்ஸின் இனையதளத்தில் இல்லை.
மதிப்பீடு: எனவே, இது முற்றிலும் போலியான லிங்க். இதன் மூலம் டாடா பஞ்ச் கார் பரிசாக எல்லாம் கிடைக்காது. இதை கிளிக் செய்வதால் உங்கள் போனில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் மக்கள் வாட்ஸ் அப்பில் பரவும் இந்த லிங்குகளை கிளிக் செய்வதையும் மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்வதையும் தவிர்க்க வேண்டும்.