- GeneralViral Check
- June 12, 2023
- No Comment
Fact Check: நர்சிங் படித்தவர்கள், ஜூனியர் டாக்டர்களுக்கு இணையாக கருதப்படுவார்கள் என பரவும் செய்தி உண்மையா?

Claim: நர்சிங் படிப்பும் டாக்டர் படிப்பும் கிட்டத்தட்ட ஒன்று என்று கூறும் வகையில் இந்திய நர்சிங் கவுன்சில் ஒரு அறிக்கையை வெளியிட்டதாக கீழ்வரும் செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
செவிலியர் விண்ணப்பதாரர்களின் நீண்ட நாள் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை பூர்த்தி செய்யவும், அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் பல்வேறு கூட்டங்களுக்குப் பிறகு இன்று சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
- இன்று அனைத்து இளங்கலை செவிலியர்களுக்கும் எங்கள் தரப்பில் இருந்து நர்சிங் அதிகாரிகள் என்ற பட்டம் வழங்கப்படுகிறது, எதிர்காலத்தில் அவர்கள் இந்த பெயரால் அறியப்படுவார்கள்.
- இளங்கலை நர்சிங் பயில்பவர்கள் பணி கிட்டத்தட்ட M B B S விண்ணப்பதாரர்களின் வேலைக்கு சமம்.
- எதிர்காலத்தில் நாம் அவர்களை இளைய மருத்துவர்கள் என்று அழைப்போம் என்பதை மறுக்க முடியாது
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மதீப்பீடு: உண்மையில் இந்திய நர்சிங் கவுன்சில் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டதா என்று கூகிள் ரிவேர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் ஆராய்ந்து பார்த்த போது, இந்த அறிவிப்பை இந்திய நர்சிங் கவுன்சில் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது. அதேபோல், இந்திய நர்சிங் கவுன்சிலின் பிரத்யேக தளங்களில் பார்த்தபோதும், செய்தி தளங்களிலும் தேடியபோதும், இது போன்ற ஒரு அறிக்கை வெளியிடப்படவில்லை என்று உறுதி ஆனது.
அதோடு, இந்த அறிக்கை பொய்யானது என்றும் இந்த அறிவிப்பை யாரும் உண்மை என்று நம்பி பகிர வேண்டாம் என்றும் இந்திய சுகாதார அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Link: https://tinyurl.com/3dayykhf
எனவே, செவிலியர்கள் மருத்துவர்களாகவும், நர்சிங் அதிகாரிகளாகவும் இனி கருதப்படுவார்கள் என்று பரவும் கூற்று போலியானது. இதனை உண்மை என்று நம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.