மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக பரவும் செய்தி உண்மையா?

மாணவர்களுக்கு மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக பரவும் செய்தி உண்மையா?
Claim:
மத்திய அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக ஒரு இணைப்புடன் செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சலுகையைப் பெற, தனிப்பட்ட தகவல்களைப் அளிக்கும்படி அந்த செய்தி பரவி வருகிறது. சென்ற வருடமும், இதே போல் மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக செய்தி ஒன்று வைரலானது. பரவி வரும் இந்த செய்தி உண்மையா?

 

உண்மை என்ன?

பரவி வரும் இந்த செய்தி உண்மைதானா என்று இணையதளதில் ஆராயந்து பார்த்தபோது, இந்த செய்தி போலியானது என்றும், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் மதிய அரசின் உண்மை சரிபார்க்கும் அதிகாரபூர்வ தளமான PIB factcheck அறிவித்துள்ளது தெரியவந்தது. 

 

 

மேலும், சென்ற ஆண்டும் இதே போல் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவியதும், அதுவும் போலி என்று பல உண்மை சரி பார்க்கும் இணைதளங்கள் கண்டறிந்துள்ளதும் தெரியவந்தது.

 லிங்க் ஆதாரம்: https://tinyurl.com/4jsfrd4z

சென்ற வருடம் வைரல் ஆன அந்த இணையதள பதிவில், அரசின் இந்த இலவச சலுகையைப் பெற, மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறும், அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது போல் அதில் வழங்கப்பட்டுள்ள அரசின்அதிகாரப்பூர்வ வலைதளத்தை  தவறாமல் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

ஆனால், அந்த பதிவில் தவறான வாக்கிய அமைப்புகளும் மற்றும் இலக்கணப் பிழைகளும் காணப்பட்டன. PIB factcheck இது போலியான தகவல் என்று தனது டிவிட்டர் (இப்போது x) பக்கதில் அறிவித்திருந்தது.

 

மதிப்பீடு:

பரவி வரும் இந்த ‘மத்திய அரசின் இலவச லேப்டாப் சலகை’ என்ற செய்தி முற்றிலும் போலியானது. இது பொய்யான தகவல் என்று சென்ற வருடமே பல உண்மை சரிபார்ப்பு வலைதளங்களில் தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும், இந்த செய்தி மீண்டும் சந்தேகத்துக்கிடமான இணைப்புகளுடன், தனிப்பட்ட தகவலை சேகரிக்கும் வகையில் பரவி வருகிறது. இதை பொது மக்கள் யாரும் நம்பி தங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என்று கேட்டுகொள்கிறோம். உண்மையான ஆதாரங்களை  எப்போதும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில்  சரிபார்க்கவும்.

 

Related post

Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி நிமிட புகைபடங்கள் என்று பரவும் செய்தி உண்மையா?

Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி…

பரவிய செய்தி: உலகையே அதிர்ச்சிக்குள்ளக்கிய அகமதாபாத் விமான விபத்தின் சில நொடிகளிக்கு முன்பு விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஜூன்…
Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிக்கும் புகைப்படம் உண்மையா?

Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே…

பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே இருவரையும் இணைத்து பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே…

Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…