அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு துபாய் பூர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் ராமரின் உருவம் இருப்பது போல் ஒரு போட்டோ பரப்பப்பட்டு வருகிறது. 22 ஜனவரி 2024 அன்று அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து புர்ஜ் கலீஃபாவில் ராமர் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் தங்கள் சமூக வலை தளங்களில் இதனை பகிர்ந்து வந்தனர்.
உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த செய்தியின் உண்மைதன்மையை ஆராய்ந்து பார்த்த போது அந்த படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் இந்த படத்தை தேடியபோது, புர்ஜ் கலீஃபாவின் ஒரே மாதிரியான படம் இடம்பெற்றிருந்த பயண வலைப்பதிவை அது சுட்டிக்காட்டியது. துபாய் பற்றிய ஒரு பயண வலைதளத்தில், இதே புகைப்படம் ‘இரவில் புர்ஜ் கலீஃபா’ என்ற தலைபுடன் அக்டோபர் மாதம் 2019 ஆம் ஆண்டு பகிரப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆனால், அதில் வெறும் கட்டிடம் விளக்கொளிகளுடன் காணப்பட்டது.
மேலும், அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் தொடர்பாக புர்ஜ் கலீஃபாவில் ராமர் படம் ப்ரொஜெக்ஷன் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. புர்ஜ் கலிஃபாவின் ஸ்டாக் புகைப்படத்தில் ராமரின் படத்தை பொருத்தி டிஜிட்டல் முறையில் இந்த வைரலான படம் உருவாக்கப்பட்டுள்ளது உறுதி ஆனது.
பொதுவாக, புர்ஜ் கலிஃபாவில் இது போன்று ஏதேனும் பகிரபட்டால் அதன் அதிகாரபூர்வ சமூக வலைதங்களில் அதை பற்றிய செய்தி புகைப்படத்துடன் இருக்கும். அதை ஆய்வு செய்து பார்க்கையில், அதிலும் இப்படி ராமர் புகைப்படம் இருக்கும் எந்த ஒரு தகவலும் பகிரபடவில்லை.
மதிப்பீடு:
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு துபாய் பூர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் ராமரின் உருவம் இருப்பது போல் பகிரப்படும் போட்டோ போலியானது. அந்த புகைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புர்ஜ் கலீஃபாவின் அதிகாரபூர்வ வலைதளங்களிலோ மற்றும் சமூக வலைதளங்களிலோ இந்த புகைபடம் பகிரப்படவில்லை. எனவே, இதை உண்மை என்று நம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பரவிய செய்தி: உலகையே அதிர்ச்சிக்குள்ளக்கிய அகமதாபாத் விமான விபத்தின் சில நொடிகளிக்கு முன்பு விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஜூன்…
பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…