உண்மை என்ன:
கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் ஒரு பெண்ணை கேலி செய்தது மீண்டும் இந்தி திணிப்பு விவாதத்தை தூண்டியுள்ளது. இது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால் இந்தி தேசிய மொழி அல்ல என்று தமிழக முதல்வர் மீண்டும் வலியுறுத்தி இதுபோன்ற கருத்துக்கள் தவறாக வழி நடத்துபவை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சிஐஎஸ்எஃப் ஆல் இந்தி தெரியதாதற்காக கேலி செய்யபட்டதாகக் கூறிய பெண் இந்தியில் X இல் பதிவிட்டுள்ளார் என்ற செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த சூழலில், பல சமூக ஊடக பயனர்கள் ஷர்மிளா ராஜசேகரன் என்ற பெயரில் X தளத்தில் ஒரு பயனரின் ஹிந்தி பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவை பகிர்ந்த பயனர்கள், ஷர்மிளாவுக்கு ஹிந்தி தெரிந்தும் அவர் வேண்டுமென்றே ஹிந்தி தெரியாதது போல் பேசியதாகக் கூறி கேலி செய்து வருகின்றனர்.