மல்யுத்த வீரர்கள் கைதாகி போலீஸ் வாகனத்தில் சிரித்துக்கொண்டே சென்றதாக பரவும் போட்டோ உண்மையா?

மல்யுத்த வீரர்கள் கைதாகி போலீஸ் வாகனத்தில் சிரித்துக்கொண்டே சென்றதாக பரவும் போட்டோ உண்மையா?

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ள இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கடந்த 4 மாதங்களாக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் முன்னணி வீரர்களான வினேஷ் போகாத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் தொடர்ந்து கலந்து கொண்டு பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழா நடைப்பெற்ற வேளையில், தங்களின் கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைக்காததை வலியுறுத்தி அமைதி பேரணி நடத்த வீரர்கள் திட்டமிட்டிருந்தனர். ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி பேரணி தொடங்கியபோது, மல்யுத்த வீரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை வலுக்கட்டாயமாக முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில், டெல்லி போலீசார் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்ய முற்பட்டனர் .   கைதுக்கு ஒத்துழைக்காததால், வீரர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டனர். கைதாகிய வீரர், வீராங்கனைகள் காவல் வண்டியில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர். அதில் அவர்கள் களைப்பாக, இருப்பது போன்று காணப்பட்டனர்.


ஆனால், ஒரு சில நிமிடங்களில் அதே புகைப்படத்தில் வீரர், வீராங்கனைகள் ஜாலியாக சிரித்துக்கொண்டு கைதானதாக போட்டோ ஒன்று ட்விட்டரில் வெளிவந்தது வைரலானது.

ஆனால், இந்த புகைப்படம் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.  உசைர் ரிஸ்வி என்ற  பத்திரிகையாளர் இந்த புகைப்படம் FaceApp செயலியைக் கொண்டு மார்பிங் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.  அந்த புகைப்படம் எப்படி மாற்றப்பட்டது என்ற டெமோவையும் வல்லுநர்கள் வீடியோவாக வெளியிட்டனர்.


மார்பிங் செய்யப்பட்ட படத்தைப் பரப்பியதற்காக ‘ஐடி செல்’ மீது குற்றம் சுமத்திய புனியா, அந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்கள் மீது புகார் அளிக்கப் போவதாக கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு ஒலிம்பிக் விளையாட்டில் பதக்கம் வாங்கித் தந்து பெருமை படுத்திய மல்யுத்த வீரர்களின் புகைப்படம் இப்படி மார்பிங் செய்யப்பட்டு பரப்பப்படுவது, நமக்கு வரும் செய்திகளையும் புகைப்படங்களையும் எவ்வளவு எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

முடிவு: மல்யுத்த வீரர்கள் கைதானபோது சிரித்தபடி சென்றதாக வரும் போட்டோ போலி என உறுதியானதை அடுத்து, அதை இனி பகிரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

Related post

Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிக்கும் புகைப்படம் உண்மையா?

Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே…

பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே இருவரையும் இணைத்து பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே…

Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…
இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம் மோகம் கொள்கிறார்கள் என்ற தலைப்புடன் ABP News செய்தி வெளியிட்டதா?

இந்து பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம் மோகம்…

Claim: புடவை அணிந்த  பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *