நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்திய ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது நல்லது என்று, பாஜக தலைவரும், எம்.எல்.ஏ ஆகிய வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி பரவியது.
Claim: “இனி வரும் காலங்களில் இது போன்ற ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது தான் சிறந்த முடிவாகும்,” என்று பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாக News Now 4 தமிழ் என்ற தளம் செய்தி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலர் அந்த பதிவை பகிர்ந்தனர்.