- Politi CheckVideosViral Check
- July 7, 2023
- No Comment
Fact Check: பாரிஸ் ஈபில் டவர் மீதான தாக்குதலைச் சித்தரிக்கும் வீடியோ உண்மையா?
Claim
ஜூன் 27 அன்று 17 வயதான நேஹால் மெர்சூக் என்ற சிறுவன் ஒரு போலீஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சில் எதிர்ப்புகள் மற்றும் அமைதியில்லாத சூழல் நிலவுகிறது. 200க்கும் மேற்பட்ட பிரான்ஸ் நகரங்கள் வன்முறை ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பிரான்சில் இருக்கும் அமைதியற்ற சூழலில், பிரான்ஸின் தலைநகர் ‘இறந்து கொண்டிருக்கிறது’ என்ற தலைப்பில் பாரிஸ் நகரத்தில் கலவரத்தை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், ஈபில் கோபுரம் தாக்கப்படுவது போலவும் அந்த வீடியோவில் அமைந்துள்ளது.
ஈபெல் டவர் முன் நின்று ஒரு பெண் செல்பி எடுப்பது போல் தொடங்கும் அந்த வைரல் வீடியோவில், திடீரென்று ஈபில் டவரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் ஏற்படுவது போலவும், அதன் அதிர்ச்சியில் அந்தப் பெண் அங்கிருந்து தப்பி ஓடுவது போலும், அதைத் தொடர்ந்து அங்கு அதிக குண்டு வெடிப்புகள் நிகழ்வது போல காட்சிகள் உள்ளது. அதோடு, ஜெட் விமானங்கள் அங்கு பறந்து செல்வதும், வீடியோவின் பின்னணியில் சைரன் சத்தம் கேட்பது போலவும் காணப் படுகிறது.
Can you believe it? #Paris is dying...#Francia #Paris #FranceHasFallen #FranceRiots #Macron #Africans #TourdeFrance #Telegram #Insta #quranburning #war #Eiffel #Francia #franceViolence #MacronMustGo pic.twitter.com/M1Qd00B8VG
— Adem Palabıyık 🇹🇷 (@adem_palabiyik) July 1, 2023
உண்மை என்ன ?
இந்த வீடியோ உண்மைதானா என்று ஆராய்ந்து பார்த்த போது, இது ஐரோப்பிய அதிகாரிகள் உக்ரைன் மீது பறக்க தடை மண்டலத்தை நிறுவ வலியுறுத்தும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட கற்பனை வீடியோ என்பது தெரியவந்துள்ளது. கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் இந்த வீடியோவை ஆராய்ந்தபோது, இது கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி அன்று Newsweek என்ற வலைதளத்தில் இந்த வீடியோ பற்றிய செய்தி வெளிவந்துள்ளது தெரியவந்தது.
அதில், உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம், பாரிஸ் மீதான இராணுவத் தாக்குதலைக் கேலி செய்யும் எடிட் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும், உக்ரைன் மீது பறக்க தடை மண்டலத்தை விதிக்குமாறு மேற்கத்திய சக்திகளை உக்ரைன் மீண்டும் வலியுறுத்துவதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கமான Defense of Ukraine பக்கதில் இதே வீடியோவை மார்ச் 12, 2022 அன்று பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோ 45 வினாடிகள் கொண்டதாக இருந்தது. அதன் முடிவில், ‘நாங்கள் வீழந்தால் நீங்கள் வீழ்வீர்கள் இறுதிவரை போராடுவோம்,’ உக்ரைன் மீது வான்வழியை மூடுங்கள் அல்லது எங்களுக்கு போர் விமானங்களைக் கொடுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
#ifwefallyoufall ❗️@NATO close the sky over Ukraine! pic.twitter.com/kRWIQlU9Pn
— Defense of Ukraine (@DefenceU) March 12, 2022
மதிப்பீடு – Fake
ஈபிள் கோபுரம் மற்றும் பாரிஸின் சில பகுதிகள் வான்வழித் தாக்குதலில் தகர்க்கப்படுவதாகக் காட்டும் வீடியோ கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான ஒரு கற்பனை காணொளி என்பது கண்டறியபட்டுள்ளது. இது ஒரு டிஜிட்டல் வீடியோ உருவாக்கம். உண்மையான காட்சிகள் அல்ல. சமீபத்தில் பிரான்சில் நடந்த போராட்டங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, இந்த வீடியோ போலியானது. இதை உண்மை என்று நம்பி பகிர வேண்டாம்.