Fact Check: முன்னாள் உலக அழகி நேபாள மாடல் நிஷா கிமிரே ஊக்கக்கதை என்று பரவும் செய்தி உண்மையா?

Fact Check: முன்னாள் உலக அழகி நேபாள மாடல் நிஷா கிமிரே ஊக்கக்கதை என்று பரவும் செய்தி உண்மையா?

 Claim

முன்னாள் உலக அழகி மற்றும் Miss Nepal இரண்டாவது ரன்னர்-அப் பட்டம் வென்ற நிஷா கிமிரேவின் ஊக்கமிகு கதை என்று பதிவிட்டு சமூக வலைதளங்களில் ஒரு வைரல் போஸ்ட் பரவி வருகிறது.  

அதில், முதல் படத்தில் Instagram-இல் 14.09.2019 அன்று பதிவிடப்பட்ட படம் என்றும் இரண்டாவது புகைப்படம் 08.06.2021 அன்று Norvic மருத்துவமனையில் எடுக்கப்பட்டது என்றும் உள்ளது. 

அதாவது, முதல் படத்தில் இருக்கும் நேபாள் மாடல் நிஷா கிமிரே தற்போது இந்த கொடுமையான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஜனவரி 2019ல், டெராஹ்டூனில் மாடலிங் மற்றும் நிர்வாகத் துறையில் தனது திறமையை மேம்படுத்துவதற்காக நிஷா கிமிரே இந்தியாவுக்குப் பயணம் செய்தபோது, துரதிர்ஷ்டவசமாக அவர் ஒரு பெரிய சாலை விபத்தில் சிக்கியதால், உடல் நலக் குறைவு ஏற்பட்டு பல மாதங்கள் சிகிச்சையில் இருந்து வந்தார் என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தொடர்ந்து, அவருடைய சிகிச்சைக்கு அவர் குடும்பத்தினரால் பணம் செலுத்த முடியாததாலும், புகழின் உச்சியில் அவருடன் பழக விரும்பியவர்கள் அனைவரும் உதவாததாலும் செப்டெம்பர் மாதம் முதல் தேதி 2021 ஆம் ஆண்டு (01.09.2021) நிஷா காலமானார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

நீங்கள் வெற்றி பெறும்போது உங்களை உற்சாகப்படுத்துபவர்கள், நீங்கள் கஷ்டத்திலும், தோல்வியிலும் இருக்கும்போது உங்கள் பக்கம் இருக்க மாட்டார்கள், காணாமல் போய்விடுவார்கள்… என்று பதிவிட்டுள்ளனர்.

இதே பதிவு ஃபேஸ்புக், ட்விட்டர் என்று வெவ்வேறு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது.

 

 

உண்மை என்ன:

பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள வைரல் கதையின் உண்மைதன்மையை ஆராயும் போது சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் தனிப்பட்ட முறையில் பகிரப்பட்ட பதிவுகளைத் தவிர சரியான ஆதாரமோ, செய்தி ஊடகங்களில் இதைப்பற்றிய எந்தவித செய்தியும் இல்லை. இந்த பதிவை வெளியிட்டுள்ள நபர்கள் மற்றும் பக்கங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ பக்கங்களாக இல்லை.

இதையடுத்து, Nîshá Ghimíré என்ற பெயரைக் கொண்டு கூகுள் சர்ச் செய்ததில் மாடல், நேபாள அழகி போட்டிகளில் பங்கேற்றிருக்கிறாரா என்று அதிகார பூர்வ வலைதளங்களில் தேடிய போது இந்தியா மற்றும் நேபாளைச் சார்ந்த யாரும் Nisha Ghimíré என்ற பெயருடன் உலக அழகி போட்டிகளில் இடம்பெறவில்லை என்று தெரியவந்தது.

மேலும், மிஸ் வேர்ல்ட் நேபாள அழகுப் போட்டியாளர்கள் பெயர்களைப் பற்றிய எந்த ஊடகக் கவரேஜோ அல்லது அறிக்கையோ கிடைக்கவில்லை. மற்றும் 2019க்கு முந்தைய ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வுகளின் ரன்னர்-அப் பட்டியலில் Nisha Ghimire என்ற பெயரும் இல்லை என்பது தெரியவந்தது. 

உலக அழகிப் போட்டிகளை நடத்தும் நேபாள ஒருங்கிணைப்பாளர்களின் அதிகாரபூர்வ வலைதளதில் தேடியபோது கடந்த ஆண்டுகளில் Nisha Ghimire என்ற பெயர் அதில் இடம்பெறவில்லை என்பது உறுதியானது.

லிங்க் : https://missnepal.com.np/

அவருடைய Instagram பக்கதிலும், இப்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் போட்டோ இடம்பெறவில்லை.

லிங்க்: https://www.instagram.com/nishaghimire1994/

 

கூகிள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் வைரலான புகைப்படத்தை தேடினோம். அதில், செப்டம்பர் 1, 2021 அன்று நேபாளி யூடியூப் சேனலான உத்தப் பாண்டேயில் நிஷா கிமிரே மரணம் குறித்த வீடியோ செய்தி பதிவேற்றப்பட்டது தெரியவந்தது. 

கிமிரே நார்விக் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அதில் இடம்பெற்றிருந்தது.  
 
 

மதிப்பீடு:  Misleading

நிஷா கிமிரே என்ற இளம் பெண்ணின் மரணம் குறித்து பலரும் பல்வேறு வகைகளில் கதைகளை உருவாக்கி அவரின் இறுதி நாட்களின் படங்களை வெளியிட்டு பதிவிட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. நிஷா கிமிரே, ஒரு மாடல் அழகியோ, உலக அழகிப் பட்டம் வென்றதாக எங்கும் குறிப்பிடவில்லை. இந்தியாவில் கார் விபத்தில் சிக்கிய அவர் மருத்துவமனை சிகிச்சைக்குப்பின் அவரது வீட்டில் இருந்து சிகிச்சை மேற்கொண்டு இறந்ததாக சில செய்திகள் இருக்கிறது, ஆனால் அதுவும் சரியாக உறுதி செய்யமுடியவில்லை.

உத்வேகம் அளிக்கக் கூடிய வைரல் பதிவாக இது இருந்தாலும், மிஸ் வேர்ல்ட் நேபால் இரண்டாவது ரன்னர்-அப் நிஷா கிமிரேவின் கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது கற்பனையானது என்று கண்டறியப்பட்டது. 

எனவே, இது உண்மைக் கதை என்று நம்பி யாரும் பகிறவேண்டாம் என்று கேட்டக்கொள்கிறோம்.

 

Related post

Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி நிமிட புகைபடங்கள் என்று பரவும் செய்தி உண்மையா?

Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி…

பரவிய செய்தி: உலகையே அதிர்ச்சிக்குள்ளக்கிய அகமதாபாத் விமான விபத்தின் சில நொடிகளிக்கு முன்பு விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஜூன்…
Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிக்கும் புகைப்படம் உண்மையா?

Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே…

பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே இருவரையும் இணைத்து பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே…

Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…