சம்மர் தொடங்கி வெப்பநிலை அதிகரித்துள்ளதால், பெட்ரோல் வாகனங்கள் குறிப்பாக பைக்குகள் தீப்பற்றி எரிவதாக பல வீடியோக்கள் பரவிவருகிறது.
பைக்குகளில் அதிகபட்ச வரம்புக்கு மீறி பெட்ரோல் நிரப்பினால் எரிபொருள் டான்க் வெடிக்கும் என்றும் அதனால் பெட்ரோல் டான்க் பாதியளவு மட்டும் நிரப்பி காற்றுக்கு இடமளிக்க வேண்டும் என்று இந்தியன் ஆயில் அறிக்கை வெளியிட்டுள்ளதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
மேலும், பெட்ரோல் டான்க்கில் அதிகபட்சமாக பெட்ரோல் நிரப்பியதால் இது வரை 5 வெடி விபத்துகள் நடந்துள்ளன என்றும் அதனால் இந்த செய்தியை படித்து விட்டு நிறுத்தாமல் மற்றவர்களுக்கும், வாகனம் ஓட்டும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பகிருங்கள் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அப்படி எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்று மறுத்துள்ளது.
ஆட்டோமொபைல் பொறியாளர்கள் தங்கள் வாகனங்களை செயல்திறன் தேவைகள், மற்றும் சுற்றுப்புற நிலைமைகள் என அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பு காரணிகளுடன் வாகனங்களை வடிவமைப்பதால், குளிர்காலம் அல்லது கோடைகாலத்தைப் பொருட்படுத்தாமல் உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்ட வரம்பு (அதிகபட்சம்) வரை வாகனங்களில் எரிபொருளை நிரப்புவது முற்றிலும் பாதுகாப்பானது என்று இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது.
இதே viral செய்தி ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பரப்பப்படுகிறது. ஜூன் 3, 2019 அன்றே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இது போலியான செய்தி என்று தனது twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Nat Geo சேனலும் இந்த செய்தி போலியானது என்று ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளது என்பதை ஏப்ரல் 9, 2017 அன்று Mehmood Bawa என்பவர் தனது facebook பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தொடர்ச்சியாக 2017 முதல் ஒவ்வொரு வருடமும் வைரலாகும் இந்த விடியோவை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மற்றவர்களுக்கு பகிரும் முன் ஒரு செய்தியின் உண்மை தன்மையை ஆராய்ந்தால் இப்படி தொடர்ச்சியாக பரவும் போலி செய்திகளில் இருந்து நம்மையும் நம் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…
Claim: புடவை அணிந்த பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம்…