அதில், பிரதமர் மோடியும், ரிச்சர்ட் மார்லஸும் கேபடன் பாட் கம்மின்ஸுக்கு வெற்றிக்கோப்பையை மேடையில் வழங்கிவிட்டு, ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க ஆஸ்திரேலிய துணைப் பிரதமருடன் மோடி மேடையை விட்டு கீழே இறங்கி செல்கிறார். அங்கு நின்று கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து அங்கிருந்து செல்வதாக முழு வீடியோவில் தெளிவாகியுள்ளது.
ஆனால், மோடியை சந்தித்துவிட்டு ஆஸ்திரேலிய வீரர்கள் மேடைக்கு வர சற்றும் நேரமானதால், பாட் கம்மின்ஸ் அவர்கள் வருகைக்காக காத்திருந்திருக்கிறார். இதுவே கட் செய்யப்பட்ட வீடியோவில் காட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஐசிசி உலகக்கோப்பை 2023 விழாவில் நரேந்திர மோடி பாட் கம்மின்ஸை புறக்கணித்ததாக எந்த செய்தியும் வெளிவரவில்லை.