தி கான்வெர்சேஷன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி,
”மக்கள் பலர் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளை புரிந்துகொள்வது கடினமாக இருப்பதாலும் அவற்றில் தேவைக்கு அதிகமான தகவல்கள் இருப்பதாக உணரும் காரணத்தினாலும் சமூக வலைதளங்களில் வரும் செய்தியை விரும்பி படிக்கின்றனர் என்று கூறுகிறது. ஆனால், இது தவறான தகவல்கள் பெருகுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது, என்கிறது.
சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்திள், சமூக ஊடக தளங்களும் செயலிகளும் உண்மை சரிபார்க்கப்படாத தகவல்களின் வழித்தடங்களாக மாறியது. இது அதிகாரிகளுக்கு மட்டும் இன்றி குடிமக்கள் பலருக்கும் கூடுதல் சவால்களை அளிக்கும் வதந்திகளுக்கு வழிவகுத்தது. சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்ட சில போலிச் செய்திகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொகுத்து வழங்கியுள்ளது. அவை என்னவென்று பார்போம்.