- GeneralViral Check
- November 15, 2023
- No Comment
Fact Check: ஆசிரியர்கள் தங்கள் வாகனங்களில் ஒட்டிக்கொள்ள லோகோ-வை சுப்ரீம் கோர்ட் அங்கீகரித்த செய்தி உண்மையா?
Claim: மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்களைப் போலவே ஆசிரியர்களும் தங்கள் காரில் போடுவதற்கான லோகோவை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதாகக் கூறி வைரல் செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வளைந்த இரண்டு உள்ளங்கைகள் நடுவில் புத்தகம் மற்றும் பேனாவுடன் உள்ள அந்த லோகோவில் “I Want, I Can, I Will” என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த வைரல் செய்தி உண்மைதானா என்று இணையத்தில் ஆராய்ந்த போது இந்த செய்தி கடந்த 2018 முதல் சமூக வலைதளங்களில் பரவும் போலியான செய்தி என்பது கண்டறியப்பட்டது. இந்த செய்தி போலியானது என்று பல முறை செய்தி நிறுவனங்களும், உண்மை சரி பார்க்கும் வலைதளங்களும் பகிர்ந்துள்ளது தெரியவந்தது. இருப்பினும், இந்த செய்தி இன்று வரை உண்மை என்று நம்பி பலரால் பகிறப்படுகிறது.
இந்த செய்தி போலியானது என்று நவம்பர் மாதம் 26, 2018 அன்றே quint வலைதளத்தில் உண்மை சரிபாரக்கபட்டு பகிரப்பட்டுள்ளது.
லிங்க்: https://shorturl.at/rvTUY
மேலும், இந்த லோகோவை 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கசாபாத் அரசு மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ராஜேஷ் கண்ணா வடிவமைத்துள்ளார் என்பதை விஸ்வாஸ் நியூஸ் தனது வலைதளதில் பிப்ரவரி மாதம் 2022 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அவரை விஷ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்ட போது அவர் இந்த லோகோவை ஆசிரியர்களுக்காக அர்ப்பணித்துள்ளதாக கூறியுள்ளார்.
“டாக்டர்கள், வக்கீல்கள், சி.ஏ.க்கள் போன்றவர்கள் தங்களுடைய லோகோவை வைத்து பெருமையுடன் காரில் போடுவது போல், ஆசிரியர்களும் அங்கீகாரம் பெற லோகோ வைக்க வேண்டும் என்று நான் நினைப்பேன் என்றார். ஆனால், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக பரவும் செய்தி தவறு. இன்னும் அப்படி எதுவும் இல்லை. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
லிங்க்: https://shorturl.at/fosxz
இந்துஸ்தான் டைம்ஸ் இந்த செய்தி போலியானது என்று 2020ல் அதன் வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
லிங்க்: https://shorturl.at/ejlyJ
அப்போதே இது போலி செய்தி என்று PIB X தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
இப்போது இந்த செய்தி மீண்டும் வைரல் ஆவதை அடுத்து PIB மீண்டும் இது போலியான தகவல் என்று தனது அதிகாரபூர்வ x பக்கதில் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி பகிர்ந்துள்ளது
A photo circulating on social media claims that the Supreme Court has approved a logo for teachers to put on their vehicles like doctors and, lawyers#PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) November 5, 2023
❌ This claim is #Fake
✔️ No such directive has been given by the Supreme Court pic.twitter.com/72CDJMny5s
மதிப்பீடு : ஆசிரியர்களுக்கான லோகோ என்று சுப்ரீம் கோர்ட் அங்கீகரித்தாகக் கூறி பரவிடும் செய்தி உண்மை அல்ல. அது 2018 முதல் சமூக வலைதளங்களில் பரவும் போலியான செய்தி ஆகும். அப்படி வாகனதில் ஒட்டிக்கொள்ள எந்த ஒரு லோகோவும் ஆசிரியர்களுக்கு கோர்ட் அங்கீகரிக்கவில்லை. கடந்த 2018 முதல் வலைதளங்களில் பரவும் இந்த போலியான செய்தி இனிமேலும் பரவாமல் இருக்க இதை யாரும் உண்மை என்று நம்பி பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.