அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டிரம்ப் தனது வெற்றி உரையை ஆற்றினார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைக் கோஷமிட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அப்படி, பரவி வரும் இந்த வைரல் வீடியோ உண்மைதானா? அமெரிக்க அதிபரின் வெற்றி உரை நடைபெற்ற போது ‘மோடி மோடி’ என்று கோஷங்கள் எழுந்ததா?
Modi-Modi chants during President .@realDonaldTrump's Victory Speech & his priceless reaction!
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். அவர் நிகழ்த்திய வெற்றி உரையில், ட்ரம்ப் பேசுவதைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அனைவரும் ஒருவரின் பெயரைக் கோஷமிடுவது போலவும், அந்த ஆரவாரதிற்கு பதில் அளித்த டிரம்ப்,
“அவர் ஒரு சிறந்த மனிதர் என்று எனக்குத் தெரியும், அவர் சில விஷயங்களைச் செய்ய விரும்புகிறார், அதைச் செய்ய நாங்கள் அவரை அனுமதிக்கப் போகிறோம்,” என்று பதில் அளிப்பது போலவும் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
இங்கு டிரம்ப் குறிப்பிடும் மனிதர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்று சமூக வலைதளங்களில் பலர் வைரலாக பரப்பி வந்தனர். ஆனால், டிரம்ப் இங்கு குறிப்பிடுவது உண்மையில் நரேந்திர மோடி தானா?
Modi-Modi chants during President .@realDonaldTrump's Victory Speech & his priceless reaction!
டொனால்ட் டிரம்பின் வெற்றி உரையின் முழு வீடியோ அனைத்து முக்கிய அமெரிக்க செய்தி சேனல்களாலும் பகிரப்பட்டது. இந்த வைரல் வீடியோவின் உண்மைத் தன்மையை அறிய, அதிகாரப்பூர்வ செய்தி சேனல்களில் தேடியபோது இந்த உரை ஃபாக்ஸ் நியூஸ் யூடியூப் வீடியோவில், இடம்பெற்றிருப்பததைக் காணலாம். ஆனால் இங்கு டிரம்ப் குறிப்பிடும் மனிதர் நரேந்திர மோடி அல்ல.
முழு வீடியோவைப் பார்த்தபோது, டிரம்ப் RFK ஜூனியர் என்று பிரபலமாக அறியப்பட்ட ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் பற்றி பேசுகிறார் என்பது தெரியவந்தது. அங்கிருந்த கூட்டம் உண்மையில் அவரது புனைப்பெயரான “பாபி” என்று கோஷமிட்டது, வீடியோவில் “மோடி” என்று ஒலிப்பது போல கேட்கிறது.
வீடியோவில், “அற்புதமான மனிதர்கள் இருக்கிறார்கள், ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் போன்ற சில பெயர்களைச் சொல்லலாம். அவர் உள்ளே வந்தார். மேலும், அவர் அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக்க உதவப் போகிறார்,” என்று டிரம்ப் கூறினார். அதற்குப் பிறகு, கூட்டம் “பாபி-பாபி” என்று கோஷமிட்டது.
இந்த உரையின் போது ஒருமுறை கூட பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை மக்கள் கோஷமிடவில்லை. டிரம்பும் மோடியை குறிப்பிடவில்லை.
ட்ரம்ப் தனது வெற்றி உரையின் போது ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியரின் பெயரைக் கூறியதும் அதற்கு மக்கள் அவரின் பெயரை கோஷமிட்டத்தும் பல செய்தித்தாள்களில் குறிபிடப்பட்டுள்ளது. ஆனால், வெற்றி உரையின் போது “மோடி-மோடி” கோஷங்கள் பற்றி எதுவும் இல்லை.
மதிப்பீடு:
ட்ரம்ப் வெற்றி உரையில் மோடி-மோடி என்று மக்கள் கோஷமிடுவது போல பரப்பப்படும் வைரல் வீடியோ போலியானது. ட்ரம்ப் தனது வெற்றி உரையின் போது ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியரிடம் பெயரைக் குறிப்பிட்டார். ஒருமுறை கூட பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைக் குறிப்பிடவில்லை. எனவே, இதை உண்மை என்று நம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுகொள்கிறோம்.
பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…
Claim: புடவை அணிந்த பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம்…