- ExplainersFeatured
- December 11, 2023
- No Comment
இயற்கை பேரழிவுகளின் போது தவறான தகவல்கள் மற்றும் போலிச் செய்திகளை தவிர்ப்பது எப்படி?

பொதுவாக இயற்கை பேரிடர் காலங்களில், அவை ஏற்படுத்தும் பேரழிவு மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும். இப்போதுள்ள நவீன தகவல் தொடர்பு வசதிகள், நமக்கு செய்திகளையும் வெள்ளத்தை போல் அளவுக்கு மிஞ்சி தருகின்றன. சமீபத்தில் பெய்த மழை போன்ற இயற்கை பேரிடர்களை அடுத்து, பொதுமக்களின் கவனம் அதனால் ஏற்படும் உடனடி ஆபத்துகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மட்டும் இல்லாமல், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களிலும் செல்கிறது.
இதை தடுக்க என்ன வழி?
எப்போதும் பேரிடர் காலங்களில் அரசின் தகவல் மையங்களே அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடும் மையங்களாக செயல்படும். ஆனால். இப்போது சமூக வலைதளங்கள், மற்றும் அதில் உள்ள சமூக குழுக்கள் பல தன்னார்வலர்களைக் கொண்டு செய்திகளைப் பரப்புவதில் அதிகாரப்பூர்வ சேனல்களின் இடத்தைப் பிடித்துள்ளன. இந்த முறைசாரா ஆதாரங்கள் பெரும்பாலும் உள்ளூர் தகவல்களை விரைவாக வழங்கினாலும், அவற்றில் சில நம்பகத்தன்மை குறைவாக இருக்கலாம்.
தி கான்வெர்சேஷன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி,
”மக்கள் பலர் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளை புரிந்துகொள்வது கடினமாக இருப்பதாலும் அவற்றில் தேவைக்கு அதிகமான தகவல்கள் இருப்பதாக உணரும் காரணத்தினாலும் சமூக வலைதளங்களில் வரும் செய்தியை விரும்பி படிக்கின்றனர் என்று கூறுகிறது. ஆனால், இது தவறான தகவல்கள் பெருகுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது, என்கிறது.
சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்திள், சமூக ஊடக தளங்களும் செயலிகளும் உண்மை சரிபார்க்கப்படாத தகவல்களின் வழித்தடங்களாக மாறியது. இது அதிகாரிகளுக்கு மட்டும் இன்றி குடிமக்கள் பலருக்கும் கூடுதல் சவால்களை அளிக்கும் வதந்திகளுக்கு வழிவகுத்தது. சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்ட சில போலிச் செய்திகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொகுத்து வழங்கியுள்ளது. அவை என்னவென்று பார்போம்.
வெள்ளம் நிறைந்த தெருவில் முதலை ஒன்று நிதானமாக நடப்பதைக் போன்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரவலாக பகிரப்பட்டது.
Just a video of crocodile enjoying visiting Chennai city 😂@Portalcoin$PORTAL #ChennaiRains #Cyclone #CycloneAlert #cycloneMichaung #ChennaiRain pic.twitter.com/Dxtm2tcjeq
— Raj Singh💚🥷❤️ Memecoin (@RajSing13390) December 4, 2023
ஆனால், இந்த வீடியோவை உண்மையா என சரிபார்த்தபோது, அது ஆகஸ்ட் 17, 2022 அன்று மத்திய பிரதேசத்தில் காலனிக்குள் வழிதவறி வந்து பின்னர் மீட்கப்பட்ட முதலையின் வீடியோ என்று தெரியவந்தது. அதே வீடியோவை தவறான சான்றுடன் இந்த சென்னை வெள்ளத்தில் நிகழ்ந்தது போல் பகிரபட்டது.

இதே போல், சென்னையில் உள்ள ஒரு பல பொருள் அங்காடியில், மீன்கள் நீந்துவது போல் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வந்தது. அந்த வீடியோவில் சென்னை வெள்ளத்தில் சுப்பர்மார்கெட்டில் நிகழ்ந்தது போல் குறிபிடப்பட்டிருந்தது.
Chennai flood in supermarket pic.twitter.com/TxqdTvdv6L
— Thiruparkadal Kumarasamy (@TK_TUTICORIN) December 6, 2023
ஆனால், அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை சோதித்து பார்த்தபோது அது ஜார்ஜியாவில் உள்ள ஒரு பல்பொருள் கடை என்பது தெரியவந்தது.

இது மட்டும் இல்லாமல், சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட மிச்சாங் புயல் சமயத்தில், பல பழைய வெள்ளம் தொடர்பான வீடியோக்கள் தவறாக இணைக்கப்பட்டு பகிரப்பட்டன.
போலியான தகவல்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள சில ஆலோசனைகளை கடைபிடியுங்கள்.
- பகிரப்பட்ட தகவல்களை பல ஆதாரங்களுடன் சரிபாருங்கள்.
- பல ஆதாரங்களில் இருந்து தகவல்களை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது பகிர்வதற்கு முன் அதனை உண்மை தானா என்று ஆராய்ந்து பாருங்கள்.
- அதிகாரப்பூர்வ அரசாங்க சேனல்கள், அவசரகால சேவைகள் மற்றும் புகழ்பெற்ற செய்தி நிலையங்களில் இருந்து வரும் தகவல்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். இந்த ஆதாரங்கள் துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட புதுப்பிப்புகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- இயற்கை பேரழிவுகள் வலுவான உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன. உங்கள் உணர்ச்சிப்பூர்வமான பதிலைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் பயம் அல்லது பீதியின் அடிப்படையில் தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.
- தகவலின் துல்லியத்தை சரிபார்க்க உண்மைச் சரிபார்ப்பு இணையதளங்களை பயன்படுத்தவும்.
- தகவலின் துல்லியத்தை சரிபார்க்க உண்மைச் சரிபார்ப்பு இணையதளங்களைப் பயன்படுத்தவும்.
- தகவலைப் பகிர்வதற்கு முன் அதைச் சரிபார்க்க நண்பர்களையும் குடும்பத்தினரையும் ஊக்குவிக்கவும்.
பொறுப்பான பகிர்வு பழக்கங்களைக் கூட்டாக கடைப்பிடிப்பதன் மூலம், குறிப்பாக இயற்கை பேரிடர்களின் போது தவறான தகவல் பரவுவதை குறைக்கலாம். இது போல் பேரிடர் காலங்களில் போலியான செய்திகள்பரவுவதை நம்மால் தவிர்க்க முடியும்.
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்