claim: கோவாவில் ஹிந்தி தெரியாததால் சிஐஎஸ்எஃப் தன்னை கேலி செய்ததாகக் கூறிய பெண் இந்தியில் X இல் பதிவிட்டுள்ளார் என்ற செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன:
கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் ஒரு பெண்ணை கேலி செய்தது மீண்டும் இந்தி திணிப்பு விவாதத்தை தூண்டியுள்ளது. இது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால் இந்தி தேசிய மொழி அல்ல என்று தமிழக முதல்வர் மீண்டும் வலியுறுத்தி இதுபோன்ற கருத்துக்கள் தவறாக வழி நடத்துபவை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சிஐஎஸ்எஃப் ஆல் இந்தி தெரியதாதற்காக கேலி செய்யபட்டதாகக் கூறிய பெண் இந்தியில் X இல் பதிவிட்டுள்ளார் என்ற செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த சூழலில், பல சமூக ஊடக பயனர்கள் ஷர்மிளா ராஜசேகரன் என்ற பெயரில் X தளத்தில் ஒரு பயனரின் ஹிந்தி பதிவின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவை பகிர்ந்த பயனர்கள், ஷர்மிளாவுக்கு ஹிந்தி தெரிந்தும் அவர் வேண்டுமென்றே ஹிந்தி தெரியாதது போல் பேசியதாகக் கூறி கேலி செய்து வருகின்றனர்.
பரவி வரும் இந்த செய்தி உண்மை தானா என்று சமூக வலைதளங்களில் தேடிய போது, @SharmiSharmiji என்ற x அக்கவுண்ட் பயனர், 14 டிசம்பர் 2023 அன்று தமிழில் பகிர்ந்த ஒரு இடுகையைக் கண்டோம். அதில்,
“கோவா விமான நிலையத்தில் ஏதோ பிரச்சனை நடந்ததாகத் தெரிகிறது. அங்கு பேசிய பெண்ணை எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் தான் அந்த பெண்ணின் பெயரைப் பகிர்ந்து கொள்வதால், பாஜக-அதிமுக தன்னைப் பற்றி பேசி வருகிறார்கள் என்று தனது x பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதிலிருந்து இந்தி மொழி இடுகைகளைப் பகிர்ந்துள்ள ஷர்மிளா ராஜசேகர் என்ற பெண், இந்தி தெரியாது என்று கோவா விமான நிலையத்தில் பேசிய ஷர்மிளா அல்ல என்பது தெளிவாகிறது.
எதோ கோவா ஏர்போர்ட் ப்ராப்ளம் நடந்திருக்கும் போல. அங்க பேசிய பெண் யார் னே எனக்கு தெரியாது. ஒரே பேர் இருக்குன்னு என்னைய (கிடைக்கறவங்கள) வச்சி பப்ளிசிட்டி பண்ணிட்டு இருக்கீங்களே பாஜக அதி்முக 😃 😀 😄 😁 அறிவுஜீவிகளா .. உங்களுக்கெல்லாம் யோசிக்க இருக்க வேண்டிய ஒண்ணு இருக்கா இல்லையா
இந்த செய்தியை மேலும் உறுதி படுத்தும் விதமாக இந்த செய்தியை பகிர்ந்த டிடி நெக்ஸ்ட் பத்திரிகையாளர் ஸ்ரீகாந்தின் இடுகை இருந்தது. அதில் அவர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கபட்டு வரும் பெண் அந்த பெண்ணே அல்ல என்றும் அவருக்கு x இல் அக்கவுண்ட் இல்லை என்றும் குறிபிட்டிதிருந்தார்.
We @dt_next reported today about a TN woman asked to learn Hindi at Goa airport by CISF officials and the story was followed up in TV.
Wanted to clarify that the handles here are directing their ‘criticism’ at the wrong person. The person quoted in the story is not on Twitter. pic.twitter.com/2bM1cdvbAW
கோவா விமான நிலையத்தில் ஹிந்தி தெரியாததற்கு தவறாக நடத்தப்பட்டதாகப் புகாரளித்த சென்னைப் பொறியாளரின் அதே பெயரைக் கொண்ட ஒரு பெண்ணின் x தள பதிவு தவறாகவோ, அல்லது வேண்டுமென்றேவோ சிலரால் பகிரப்பட்டு, பயனர்களை குழப்பமடையச் செய்துள்ளது. அதனால், போலியான இந்த செய்தி மேலும் பரவாமல் இருக்க இதை உண்மை என்று நம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…
Claim: புடவை அணிந்த பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம்…