இந்திய விண்வெளி மையத்தின் சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் கடந்த ஜூலை 14 ஆம் தேதி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திராயன் -3 விண்ணில் பாய்வதை வானிலிருந்து பார்க்கும் போது இப்படி தான் இருக்குமென்று சென்னையிலிருந்து தாக்கா சென்ற Indigo விமானத்திலிருந்து எடுக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமுக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
— The Spectator Index (@spectatorindex) July 16, 2023
உண்மை என்ன?
அந்த வீடியோவை google reverse image search பயன்படுத்தி keyframe-களை வைத்து சோதனை செய்ததில், அது சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த வீடியோ Independent என்ற இணையதளத்தில் டிசம்பர் 2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அமெரிக்காவின் ப்ளோரிடாவில்உள்ளகேப்கனாவெரல் (Cape Canaveral) என்ற இடத்தை கடந்தவிமானத்தில்பயணித்தபயணி ஒருவர் ஸ்பேஸ் X ராக்கெட் (Space X rocket) ஏவப்பட்டதை கண்டதாகவும் அது விமானக் குழு உறுப்பினர் மற்றும் பயணிகள் சிலரால் வீடியோ எடுக்கப்பட்டு TikTok-இல் பகிரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ViralHog , VideoFromSpace போன்ற யூடியூப் சேனல்களில் 2021 ஆம் ஆண்டு இதே வீடியோ அட்லஸ் V ராக்கெட் என்று பகிரப்பட்டதும் தெரியவந்தது.
மதிப்பீடு:
தற்போது விமானத்தில் இருந்து சந்திராயன் -3 விண்ணில் பாயும் போது எடுக்கப்பட்ட வீடியோ என்று பகிரப்பட்டு வருவது உண்மையானது அல்ல. இந்த காணொளி இந்தியாவில் எடுக்கப்பட்டதே அல்ல என்று நமது ஆய்வில் தெளிவாகியுள்ளது. இதே வீடியோ 2021, 2022 ஆம் ஆண்டுகளில் பகிரப்பட்ட வீடியோ என்பதும் தெரியவருகிறது. அதனால் இது சந்திராயன் -3 விண்ணில் ஏவப்பட்ட வீடியோ என்று நம்பி யாரும் பகிரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…
Claim: புடவை அணிந்த பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம்…