உண்மை என்ன?
அந்த வீடியோவை google reverse image search பயன்படுத்தி keyframe-களை வைத்து சோதனை செய்ததில், அது சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த வீடியோ Independent என்ற இணையதளத்தில் டிசம்பர் 2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் (Cape Canaveral) என்ற இடத்தை கடந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் ஸ்பேஸ் X ராக்கெட் (Space X rocket) ஏவப்பட்டதை கண்டதாகவும் அது விமானக் குழு உறுப்பினர் மற்றும் பயணிகள் சிலரால் வீடியோ எடுக்கப்பட்டு TikTok-இல் பகிரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ViralHog , VideoFromSpace போன்ற யூடியூப் சேனல்களில் 2021 ஆம் ஆண்டு இதே வீடியோ அட்லஸ் V ராக்கெட் என்று பகிரப்பட்டதும் தெரியவந்தது.