சேனல் 4 என்ற செய்தித்தளத்தில், வரும் திங்கள் முதல் ஃபேஸ்புக் பயன்படுத்த மாதம் £4.99 இனி வசூலிக்கப்படும் என்று செய்தி வெளியாகி இருப்பதாகவும், இதிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள, இந்தச் செய்தியின் மீது உங்கள் விரலைப் பிடித்து நகலெடுத்து,
“எனது கணக்கில் ஒரு மாதத்திற்கு £4.99 வசூலிக்க Facebookக்கு நான் அனுமதி வழங்கவில்லை. எனது படங்கள் அனைத்தும் என்னுடைய சொத்துகளே தவிர முகநூலுக்கு சொந்தம் அல்ல!!!” என்று உங்கள் பக்கத்தில் பகிரவும். இது கணினியை மேம்படுத்துகிறது. குட் பை… எரிச்சலூட்டும் விளம்பரங்கள் மற்றும் புதிய மற்றும் பழைய நண்பர்களுக்கு வணக்கம்,” என்று செய்தி ஒன்று பரவிவருகிறது.
ஒரு செய்தியை எப்படி நகல் எடுத்து ப்ரோஃபைல் பக்கத்தில் ஒட்டுவது என்ற விளக்கத்துடன் இருக்கும் அந்த செய்தியில்,
“விற்பனை விளம்பரங்கள் மற்றும் குப்பைப் பொருட்களின் அளவு காரணமாக நீங்கள் FB-யில் இருந்து வெளியேற நினைத்தால் விலகவும்,” என்றும் கூறப்பட்டுள்ளது.