- VideosViral Check
- October 9, 2023
- No Comment
FactCheck: முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கடத்தப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையா?
Claim: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கடத்தப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கைகள் கட்டுப்பட்டு, வாய் அடைக்கப்பட்டது போல் தெரிகிறது. முன்னாள் கிரிக்கட் வீரரான கௌதம் கம்பீர் தனது x சமூக வலைதளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்ததுள்ளார். மேலும்,
“இந்த கிளிப்பை வேறு யாராவது பெற்றுள்ளீர்களா? அது உண்மையில் @therealkapildev இல்லை என்றும் கபில் பாஜி நலமாக இருக்கிறார் என்றும் நம்புகிறேன்!” என்று அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் கௌதம் கம்பீரின் டைம்லைனில் கடந்த ஆண்டு கிரிக்கெட் பண்டிட் ஹர்ஷா போக்லேவுடன் செய்ததைப் போன்று இதுவும் ஒரு விளம்பர ஸ்டண்ட் ஆக இருக்குமோ என்று வினவத் தொடங்கினர்.
Anyone else received this clip, too? Hope it’s not actually @therealkapildev 🤞and that Kapil Paaji is fine! pic.twitter.com/KsIV33Dbmp
— Gautam Gambhir (@GautamGambhir) September 25, 2023
உண்மை என்ன :
சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்திய இந்த வீடியோ உண்மை தானா என்று ஆராயந்து பார்க்க கூகிள் இணையதளத்தில் ‘Key Word Search’ செய்து தேடிய போது, இது ஒரு போலியான செய்தி என்பது தெரிய வந்தது. பரவி வந்த அந்த வீடியோ ஒரு விளம்பரப் படத்தின் திரைக்குப் பின்னால் உள்ள காட்சிகள் என்பதும் உண்மையில் கபில்தேவ் கடத்தப்படவில்லை என்பதும் உறுதியானது.
இந்த வீடியோவை பகிர்ந்த கிரிக்கட் வீரர் கௌதம் கம்பீர், அதைத் தொடர்ந்து, வரவிருக்கும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக, டிஸ்னி+ஹாட்ஸ்டாருக்காக உருவாக்கப்பட்ட விளம்பரப் படத்தின் ஒரு பகுதி வீடியோ இது என்றும், என்று அவர் மற்றொரு ட்வீட் ஒன்றை வெளியிட்டார.
மேலும், கபில் தேவ் நடிப்பை பாராட்டுமாறு “நடிப்பு உலகக் கோப்பையையும் 🏆 நீங்களும் வென்றிடுவீர்கள்! ” என்றும் பதிவிட்டிருந்தார்.
Areh @therealkapildev paaji well played! Acting ka World Cup 🏆 bhi aap hi jeetoge! Ab hamesha yaad rahega ki ICC Men's Cricket World Cup is free on @DisneyPlusHS mobile pic.twitter.com/755RVcpCgG
— Gautam Gambhir (@GautamGambhir) September 26, 2023
மதிப்பீடு :
புகழ் பெற்ற முன்னாள் கிரிக்கட் வீரர் கபில் தேவ் கடத்தப்பட்டதாக பரவிய வீடியோ உண்மையில் ஒரு விளம்பரப் படத்தின் திரைக்குப் பின்னால் உள்ள காட்சிகள. இது ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான விளம்பரப் படத்தின் திரைக்குப் பின்னால் உள்ள கிளிப் ஆகும். கபில்தேவ் கடத்தப்படவில்லை என்பது இதன் மூலம் உறுதியானது. எனவே, இதை உண்மை என்று நம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.