உண்மை என்ன?சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த செய்தி உண்மை தானா என்று சரி பார்க்க கூகிள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் இணைய தளத்தில் தேடினோம். அப்போது இது உண்மையான செய்தி அல்ல என்றும், இந்த இரு பெண்களும் ரயில் விமானிகள் அல்ல என்பதும் தெரிய வந்தது.
அவர்கள் பெயர் ஷிஜினா ராஜன் மற்றும் டயானா செல்வன் என்பதும், இவர்கள் இருவரும் இந்திய ரயில்வேயில் TTE-களாக (டிக்கெட் பரிசோதகர்) பணிபுரிகின்றனர் என்பதும் இந்த செய்தியின் உண்மைதன்மையை ஆராயும் போது தெரியவந்தது.
ஷிஜினா ராஜன் (@travelling_tte) என்ற பயனரால் செப்டம்பர் 24 அன்று இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். ஷிஜினா ராஜனின் சுயவிவரம், அவர் இந்திய ரயில்வேயில் TTE மற்றும் அவரது பணி அனுபவத்தில் இது போன்ற பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அந்த instagram அக்கவுண்ட்டில் உள்ளன.