Claim:சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் புகைப்படம், வண்டியின் எண், அபராத தொகையுடன் சாலையில் உள்ள கம்பத்தில் காட்டப்படுவது போல் ஒரு வீடியோ சமுக வலைதளங்களில் பரவிவருகிறது.
சென்னையில் பகலில் 40 கி.மீ., இரவில் 50 கி.மீ.,மேல் வாகனத்தை இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை ஜுன் 19 அன்று அறிவித்தது. முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீடு ரேடார்களின் உதவியுடன் அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் அறிவித்தனர்.
இதற்கிடையில், சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் புகைப்படம், வண்டியின் எண், அபராத தொகையுடன் சாலையில் உள்ள கம்பத்தில் வீடியோவாக காட்டப்படும் என்று சமுக வலைதளங்களில் பரவிவருகிறது.
இந்த வீடியோவை பலரும் ட்விட்டர் போன்ற சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து அவர்களது கருத்துகளை தெரிவித்து வருகிறனர்.
Violation of traffic rules in Chennai is displayed publicly. Violators will feel ashamed to see their erring act.
மதிப்பீடு: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் புகைப்படம், வண்டி எண், மற்றும் அபராத தொகை சாலையில் உள்ள கம்பத்தில் வீடியோவாக காட்டும் வசதியை சென்னை போக்குவரத்து காவல்துறை செய்யவில்லை. எனவே சமூக வலைதளங்களில் பரவிவரும் வீடியோ போலியானது, அதை இனி பகிரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
Claim: புடவை அணிந்த பல பெண்கள், இஸ்லாமிய ஆண் ஒருவரைச் சூழந்து நின்றவாறு இருக்கும் ஒரு புகைப்படம் ஏபிபி நியூஸின் லோகோவுடன், “இந்துப் பெண்கள் ஏன் முஸ்லீம் ஆண்களிடம்…
Claim: தீபாவளி பாண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அதில், குறிப்பாக x தளத்தில் ஒரு வீடியோ சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாட்டம்…
claim: கோவாவில் ஹிந்தி தெரியாததால் சிஐஎஸ்எஃப் தன்னை கேலி செய்ததாகக் கூறிய பெண் இந்தியில் X இல் பதிவிட்டுள்ளார் என்ற செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.…