Fact Check: வந்தே பாரத் ரயில் பைலட்கள் என பரவும் இரு பெண்களின் வீடியோ உண்மையா?

Fact Check: வந்தே பாரத் ரயில் பைலட்கள் என பரவும் இரு பெண்களின் வீடியோ உண்மையா?

Claim: இந்தியாவின் வந்தே பாரத் விரைவு ரயிலின் லோகோ பைலட்டுகள் என்ற கூற்றுடன் இரண்டு பெண்கள் ரயில்வே பிளாட்பாரத்தில் நடந்து வரும் வீடியோ ஆன்லைனில் வைரலாகியுள்ளது.  

“வந்தே பாரத் ரயில் லோகோ பைலட் குழுவினர்… இந்த அற்புதமான காட்சியை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்க முடியுமா? நிலக்கரி சுடப்படும் என்ஜின் டிரைவர்கள் முதல் இந்த ஏர்லைன் ஸ்டைல் இன்ஜின் குழுவினர் வரை…👌🏻👌🏻👍🏻👍🏻. உண்மையிலேயே சர்வதேசத்திற்கு செல்கிறது இந்தியா…”

என்ற செய்தியுடன் அந்த வீடியோ பரவி வந்தது.

உண்மை என்ன?சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த செய்தி உண்மை தானா என்று சரி பார்க்க கூகிள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் இணைய தளத்தில் தேடினோம். அப்போது இது உண்மையான செய்தி அல்ல என்றும், இந்த இரு பெண்களும் ரயில் விமானிகள் அல்ல என்பதும் தெரிய வந்தது. 

அவர்கள் பெயர் ஷிஜினா ராஜன் மற்றும் டயானா செல்வன் என்பதும், இவர்கள் இருவரும் இந்திய ரயில்வேயில் TTE-களாக (டிக்கெட் பரிசோதகர்) பணிபுரிகின்றனர் என்பதும் இந்த செய்தியின் உண்மைதன்மையை ஆராயும் போது தெரியவந்தது.

ஷிஜினா ராஜன் (@travelling_tte) என்ற பயனரால் செப்டம்பர் 24 அன்று இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். ஷிஜினா ராஜனின் சுயவிவரம், அவர் இந்திய ரயில்வேயில் TTE மற்றும் அவரது பணி அனுபவத்தில் இது போன்ற பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அந்த instagram அக்கவுண்ட்டில் உள்ளன.

 

 

மதிப்பீடு: TTE களை லோக்கோ பைலட்டுகள் என்று தவறாக அடையாளம் காணும் வைரலான வீடியோவின் கூற்றுகள் தவறானவை என்றும் மேலும் வீடியோவில் இடம்பெற்றுள்ள இரு பெண்களும் இந்திய ரயில்வேயில் பயண டிக்கெட் பரிசோதகர்கள் என்பதும்  இதன் மூலன் கண்டறியப்பட்டுள்ளது . எனவே, இந்த வீடியோவை உண்மை என்று நம்பி யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.


Related post

Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி நிமிட புகைபடங்கள் என்று பரவும் செய்தி உண்மையா?

Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி…

பரவிய செய்தி: உலகையே அதிர்ச்சிக்குள்ளக்கிய அகமதாபாத் விமான விபத்தின் சில நொடிகளிக்கு முன்பு விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஜூன்…
Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிக்கும் புகைப்படம் உண்மையா?

Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே…

பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே இருவரையும் இணைத்து பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே…

Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…