உண்மை என்ன :
இந்த வீடியோவின் உண்மைதன்மையை ஆராய இனணயத்தில் தேடிய போது மிதிலேஷ் கேஷாரி (@mkeshari)என்ற ஒரு பயனர் இதை முன்பே பகிர்ந்துள்ளது தெரியவந்தது.
சந்திரயான்-3 என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) சந்திரயான் 1 மற்றும் 2க்குப் பிறகு சமீபத்திய சந்திர ஆய்வுப் பணியாகும். இது ஆகஸ்ட் 14, 2023 அன்று விக்ரம் என்ற லேண்டர் மற்றும் பிரக்யான் என்ற ரோவருடன் ஏவப்பட்டது. சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 மாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ சேனல்களில் நிலவின் பல காட்சிகளை பகிர்ந்துள்ளது.
ஆனால், X இல் பகிறபட்ட வீடியோ ai ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ. அவை சந்திரயான்-3 இல் இருந்து எடுக்கபட்ட வீடியோ அல்ல. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ X கணக்கிலோ அல்லது அதன் இணையதளத்திலோ இந்த வீடியோ வெளியிடப்படவில்லை.
மேலும், இணையதளத்தில் இந்த வீடியோவைப் பற்றி ஆராய்ந்த போது, மிதிலேஷ் கேசரி என்பவரின் ட்வீட்டில் பல பயனர்கள் வீடியோ திருத்தப்பட்டதாகவும், போலியாகவும் இருப்பதாகக் கருத்துத் தெரிவித்ததைக் காண முடிந்தது. அதைத் தொடர்ந்து அந்த வீடியோ AI-யால் உருவாக்கப்பட்டதாகவும் சந்திரயான்-3 ஆல் எடுக்கப்பட்டதல்ல என்றும் அவர் அதில் பதிவிட்டிருந்தார